Categories: சினிமா

சாண்டி, கோவை சரளா நடிப்பில் உருவாகும் புது படம்.! “Gift” படத்தின் முதல் பார்வை வீடியோ இதோ.!

வெளியிட்டது

தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். இவர் அடுத்ததாக தான் இயக்க இருக்கும் படத்திற்கு கிப்ட் என்று பெயர் வைத்து அதற்கான முதல் பார்வை வீடியோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சாண்டி, கோவை சரளா நடிப்பில் உருவாகும் புது படம்.! "Gift" படத்தின் முதல் பார்வை வீடியோ இதோ.! 1

பிரேமம் படத்தை இயக்கியதன் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. படத்தில் நடித்த அனைவரும் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவரது இயக்கத்தில் கோல்ட் என்ற படம் வெளியானது. பிரித்விராஜ் நயன்தாரா நடித்த இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

இந்த நிலையில் தொடர்ந்து அல்போன்ஸ் புத்திரன் தமிழில் கிப்ட் என்கிற படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் சாண்டி, கோவை சரளா, சஹானா சர்வேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு கிப்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் வித்தியாசமாக எடுக்கப்பட்ட படம் என்று சொல்லப்படுகிறது. ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் இருந்து முதல் பார்வையை தற்போது வீடியோவாக வெளியிட்டுள்ளனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Sony Music South

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்