தளபதி விஜய் மிகவும் எதிர்பார்த்த இயக்குனரான வெங்கட் பிரபு உடன் கூட்டணி வைத்து உள்ளார். இவர்கள் கூட்டணியில் தற்போது கோட் படம் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் இவருடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன் , சினேகா என பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்து இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 5ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில்,அடுத்தடுத்து அப்டேட்டை படக்குழு கொடுத்து வருகிறது. இதுவரை இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. தற்போது இப்படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாக உள்ளது. இப்பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். கங்கை அமரன் மற்றும் சரஸ்வதி புத்ரா எழுதியுள்ளனர்.
ஸ்பார்க் என தொடங்கும் இப்பாடலின் ப்ரோமோவை தற்போது படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டு உள்ளார். இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. தற்போது ட்வீட்டரில் இந்த பாடலின் ப்ரோமோ ட்ரெண்ட் ஆகி வருகிறது.
Embed Video Credits : T SERIES