நடிகர் விக்ரம் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள படம் தங்கலான். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகி இருக்கிறது. படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இப்படத்தை காண காத்து இருக்கின்றனர். தனது படங்களில் வித்தியாசத்தை கொடுத்து ரசிகர்களை கவரும் பா ரஞ்சித் படம் என்பதால் இப்படத்திற்கான தரம் இன்னும் உயர்ந்து இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தில் இவருடன் பார்வதி, மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள வார் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜிவி மற்றும் அறிவு இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. ஜிவி பிரகாஷ் குரலில் உருவாகி இருக்கும் இப்பாடல் தற்போது பலருக்கும் விருப்ப பாடலாக மாறி உள்ளதாக கருத்துக்களை ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
Embed Video Credits : JUGNLEE MUSIC TAMIL