உச்சத்தை எட்டியது தங்கம் விலை! சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ரூ.30,560க்கு விற்பனை!!

வெளியிட்டது
உச்சத்தை எட்டியது தங்கம் விலை! சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ரூ.30,560க்கு விற்பனை!! 1

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களாலும், உள்நாட்டில் நிலவும் மாற்றங்களாலும் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கத்துடன் காணபடுகிறது.

இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று (ஜன 11) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,820 ஆக உள்ளது. தூய தங்கமான 24 காரட் தங்கத்தின் விலை இன்று கிராமிற்கு 20 ரூபாய் உயர்ந்து, ரூ.4,010க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் 50 காசுகள் அதிகரித்து கிராம் ரூ.50. 60 அக விற்பனை செய்யப்படுகிறது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்