
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஆஸ்திரேலியாவில் கடுமையான காட்டு தீ பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டாலும் முழுவதுமாக தடுக்க முடியவில்லை என்ற நிலையே உருவாகி உள்ளது. இந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு காட்டுத் தீ பரவாலக பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று அந்நாட்டு மக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நாட்டில் உள்ள நியூ சவுத்வேல்ஸ், விக்டோரியா ஆகிய இடங்களிலும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பயங்கரமாக வருகிறது. இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் , தேசிய காட்டுத் தீ மீட்பு குழு என்ற புதிய அமைப்பு ஒன்றை தொடங்கி இருக்கிறது அந்நாட்டு அரசு, முதல் கட்டமாக 9,800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், காட்டுத் தீ காரணமாக இதுவரை 60 லட்சம் ஹெக்டேருக்கும் மேலாக வனப்பகுதி தீயில் கருகியுள்ளது. 1,500க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் தீயினால் எரிந்து நாசமானது. பல்லாயிரக்கணக்கான கோலா, கங்காரு உள்ளிட்ட விலங்குகளும் , பறவைகளும் அழிந்து. பல அரியவகை மரங்கள், செடிகளும் அழியும் நிலையில் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.