ஓமன் நாட்டின் மன்னர் காலமானார்! அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதில் குழப்பம்!!

ஓமன் நாட்டின் மன்னர் காலமானார்! அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதில் குழப்பம்!! 1

ஓமன் நாட்டிலன் அதிபராக இருந்த காபூஸ் பின் அல் சையத் காலமானார் என்ற செய்தி வெளியானது. ஓமன் நாட்டில் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தவர் சுல்தான் காபூஸ் பின்
1970-களில் அவரது தந்தை சயித் பின் தைமூரை ஆட்சியில் இருந்து கவிழ்த்துவிட்டு பதவிக்கு வந்த காபூஸ் பின் சையத் அல் சையத், எண்ணெய் வளம் நிறைந்த அவர் நாட்டை மாபெரும் வளர்ச்சிக்கு கொண்டு சென்றார்.

கடந்த சில மாதங்களாக அவருக்கு பெல்ஜியத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் சிகிச்சை முடிந்ததும் நாடு திரும்பினார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தனது வாழ்வில் திருமணமே செய்து கொள்ளலாமல் வாழ்ந்த காபூஸ், அடுத்த சுல்தான் யார் என்பதையும் அறிவிக்கவில்லை.

விளம்பரம்

இந்த நிலையில், அந்நாட்டில் உள்ள வழக்கத்தின் படி மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஏறக்குறைய 50 பேர் நாளைக்குள் கூட்டம் கூட்டி புதிய சுல்தானை தேர்வு செய்வார்கள். சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் மறைவையொட்டி மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

தொடர்புடையவை  தெற்கு ஆசியாவின் மிக உயரமான கோபுரத்தை இலங்கை திறக்கவுள்ளது!

மேலும், இந்திய நாட்டின் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில்
ஓமன் மன்னர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment