Categories: சினிமா

கோலி சோடாவுல நடிச்ச சாந்தினியை ஞாபகம் இருக்கா? இப்ப எப்படி இருக்காங்கனு பாருங்க.!

வெளியிட்டது

கோலிசோடா படத்தில் நடித்த நடிகை சாந்தினிக்கு தற்போது திருமணமாகி குழந்தை இருக்கிறது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இயக்குனர் விஜய் மில்டன் இயக்கிய திரைப்படம் தான் கோலிசோடா. இந்த படம் சென்னையில் இருக்கும் சிறுவர்களுக்கும் அவர்களுக்குள் நடக்கும் காதலைப் பற்றியும் எடுக்கப்பட்ட படமாகும். வித்தியாசமான கதை அம்சத்துடன் எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த பெண் நடிகை சாந்தினி.

கோலி சோடாவுல நடிச்ச சாந்தினியை ஞாபகம் இருக்கா? இப்ப எப்படி இருக்காங்கனு பாருங்க.! 1

இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவர் நடிப்பில் முதன்முறையாக வெளியான படம் தான் கோலிசோடா. இந்த படத்தை இயக்கியவர் விஜய் மில்டன். இவர் சினிமோட்டோகிராபராக வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் இயக்குனராக அறிமுகமானவர். 2006 ஆம் ஆண்டு வெளியான அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தில் இயக்கியதன் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.


சாந்தினி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பார்த்திருக்கிறார் விஜய் மில்டன். பின்னர் இவரை பின்தொடர்ந்து சென்று சாந்தினியிடம் போன் நம்பரை கேட்டுள்ளார். ஆனால் சாந்தினி இவர் இயக்குனர் என்பதை தெரிந்து கொள்ளாமல் இவரை திட்டி அனுப்பி இருக்கிறார். பின்னர் சாந்தினியின் வீட்டிற்கு சென்று சமாதானம் செய்து இந்த படத்தில் நடிக்க சம்மதம் பெற்றிருக்கிறார் விஜய் மில்டன்.

இந்த படத்தில் நடித்த சாந்தினிக்கு விருதுகளும் கிடைத்திருந்தது. அதன் பின்னர் விஜய் மில்டன் இயக்கியிருந்த 10 எண்றதுக்குள்ள என்ற படத்திலும் நடிகர் சியான் விக்ரமுக்கு தங்கை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

பின்னர் 2015 ஆம் ஆண்டு வெளியான குரங்கு கையில பூ மாலை என்கிற படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால் இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால் திரைத்துறையில் இருந்து விலகி மீண்டும் தனது படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார் சாந்தினி.


பின்னர் சில படங்களில் மட்டுமே நடித்து வந்த அவர் சாரதி என்பவரிடம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி தற்போது குழந்தையும் இருக்கிறார்கள். குழந்தையின் முதல் பிறந்தநாள் அன்று புகைப்படத்துடன் வெளியிட்டு இருக்கிறார் சாந்தினி. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சாந்தனியே குழந்தை போல் இருப்பார் தற்போது அவருக்கு திருமணம் ஆகிய ஒரு குழந்தை இருக்கிறதா என்று ரசிகர்கள் காமெடியாக கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது மீண்டும் திரைத்துறைக்கு திரும்புவதற்காக சாந்தினி வாய்ப்புகள் தேடி வருவதாக தகவல்களும் வெளியாகி இருக்கிறது!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்