ஜெய் பீம் படம் மூலமாக பலரின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் மணிகண்டன். இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் குட் நைட். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஒரு குறட்டையால் குடும்பம் எப்படி பிரிகிறது என்பது குறித்த கதை தான் இந்த திரைப்படம். பீட்சா 2 என்கிற படத்தின் மூலமாக எழுத்தாளராக அறிமுகமானவர் மணிகண்டன். அப்போது அவர் பெரிய அளவில் பேசப்படவில்லை. தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் காதலும் கடந்து போகும், எட்டு தோட்டாக்கள், விக்ரம் வேதா போன்ற பல படங்களில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் காலா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் எந்த படத்திலும் கிடைக்காத அங்கீகாரம் இவருக்கு ஒரு படத்தில் கிடைத்தது என்று சொன்னால் அது ஜெய் பீம் திரைப்படம் தான். இந்த படத்தின் மூலமாக இவரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்தவராக இவர் நடித்திருப்பார். யாரோ செய்த தவறுக்காக இவரை அழைத்துக் கொண்டு போய் இவருக்கு ஜெயில் தண்டனைகள் கிடைத்திருக்கும். இதனால் இவரது உயிரும் பிரிந்து இருக்கும். அந்த காட்சிகளில் எல்லாம் மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் மணிகண்டன். குறிப்பாக போலீஸ் அடிக்கும் பொழுதும் கண்களில் மிளகாய் பொடி தூவும்போதும் இவருடைய நடிப்பு மிகப் பிரமாதமாக இருந்தது. ஜெய் பீம் படம் விருதுகளையும் வாங்கி குவித்து இருந்தது என்று சொன்னால் அதற்கு முக்கிய காரணம் இவருடைய நடிப்புதான். தற்போது இவர் கதாநாயகனாக நடிக்கும் குட் நைட் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை விநாயக் சந்திரசேகர் என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், மீத்தா ரகுநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மில்லியன் டாலர் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது் சான் ரோல்டன் என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. டீசரை பார்க்கும் பொழுது ஒரு குறட்டையால் ஒருவரின் வாழ்க்கையை எப்படி வீணாகிறது? மனைவி கணவனை பிரிந்து செல்வது போன்ற கதாபாத்திரத்தில் மணிகண்டன் நடித்திருக்கிறார். இந்த படமர மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று பலரும் மணிகண்டனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த ட்ரைலரை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Think Music India