3 வருசமா நடிக்கிறேன்.! கொஞ்ச நாள் ரெஸ்ட் தேவை.! சீரியலை விட்டு விலகுகிறாரா கோபி? அவரே வெளியிட்ட வீடியோ.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 800 எபிசோடுகளில் நடித்து முடித்து விட்டேன். இனி தனக்கு கொஞ்சம் ரெஸ்ட் தேவைப்படுகிறது. புதிதாக வந்திருக்கும் ஹீரோவுக்கு ஆதரவு கொடுங்கள் என்று கோபி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதனால் கோபி சீரியலில் இருந்து விலகப் போகிறாரோ? என்கிற சந்தேகம் அனைவருக்கும் எழுந்திருக்கிறது. விஜய் டிவியின் டாப் ஹிட் தொடர்களில் ஒன்றாக இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. கணவரை பிரிந்து தனியாக வாழும் பாக்யா திருமண ஆர்டர்கள் ஐடி கம்பெனி கேண்டீன் கான்டிராக்ட் என எடுத்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். ஆனால் கோபியும், அவரது இரண்டாவது மனைவி ராதிகாவும் எப்படியாவது பாக்யாவை வாழ விடாமல் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து தொல்லைகளை கொடுத்து வருகின்றனர். ராதிகா வேலை பார்க்கும் கம்பெனியில் தான் கேன்டீன் ஆர்டர் எடுக்கிறார் பாக்யா. ஆனால் அதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று போராடுகிறார் ராதிகா. இறுதியில் பாக்யா வெற்றி பெறுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3 வருசமா நடிக்கிறேன்.! கொஞ்ச நாள் ரெஸ்ட் தேவை.! சீரியலை விட்டு விலகுகிறாரா கோபி? அவரே வெளியிட்ட வீடியோ.! 1

இப்படி தொழில் ரீதியாக ராதிகா ஒரு பக்கம் குடைச்சல் கொடுத்து வர, மனரீதியாகவும் பணரீதியாகவும் ஒரு பக்கம் கோபி குடைச்சல் கொடுத்து வருகிறார். அதாவது தற்போது பாக்யா மற்றும் மற்றவர்கள் அனைவரும் வாழ்ந்து வரும் வீடு கோபியின் சொந்த முயற்சியில் கட்டப்பட்ட வீடு. இந்த வீட்டை எப்படியாவது பாக்யாவிடமிருந்து பிடுங்கி விட வேண்டும் என்று கோபி முடிவு எடுக்கிறார். அதற்காக 70 லட்சம் கொடுத்து இந்த வீட்டை வாங்கிக் கொள்ளுங்கள் என்று எழில் மற்றும் பாக்யாவிடம் சவால் விட்டிருக்கிறார். அதற்கு பாக்யா ஆறு மாதங்கள் நேரம் கொடுங்கள் முதலில் 20 லட்சம் ரூபாய் தவணை கொடுத்து நான் இந்த வீட்டை வாங்கிக் கொள்கிறேன் என்று சவால் விட்டு இருக்கிறார். அதன்படி தற்போது திருமண ஆர்டர்கள் எடுத்து முதல் கட்டமாக 2 லட்சம் ரூபாயை கொடுத்து இருக்கிறார். இதனால் கோபி அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார். கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்க தற்போது புது என்ட்ரி ஆக சீரியலில் நடிகர் ரஞ்சித் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவர் பாக்கியாவிற்கு நண்பராக வருவாரா அல்லது பாக்யாவிற்கு இரண்டாவது திருமணம் என்று கதை நகருமா என்று குழப்பத்தில் பாக்கியலட்சுமி ரசிகர்கள் இருந்தனர்.


இந்த நிலையில் தற்போது கோபியாக நடித்து வரும் நடிகர் சதீஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் புதிதாக என்ட்ரி கொடுத்திருக்கும் ரஞ்சித்திற்கு எங்களுக்கு ஆதரவு கொடுத்தது போலவே ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மூன்று ஆண்டுகளாக சுமார் 800 எபிசோடுகளுக்கு மேல் நடித்து விட்டேன் எனக்கும் கொஞ்சம் ரெஸ்ட் தேவைப்படுகிறது. வயதாகிறது அல்லவா என்று கூறியிருக்கிறார். இதனால் இவர் சீரியலில் இருந்து விலகப் போகிறாரோ என்கிற கேள்வி எழுந்தது. ஆனால் இனி தான் வரும் காட்சிகள் குறையப்போகிறது என்று ஆறுதல் அளிக்கும் விதமாக கூறியிருக்கிறார். இதன் மூலமாக கோபி சீரியலில் இருந்து விலகவில்லை என்பது தெளிவாகிறது. இருப்பினும் கோபி சூசகமாக பேசி இருப்பதால் ரசிகர்கள் சிறிது கவலையில் இருக்கின்றனர். நீங்களும் அவரின் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்