நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் பத்து தல படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. தமிழ் உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. தனது தந்தையின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழின் நட்சத்திர நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் சிம்பு. இவர் கடந்த 2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்கிற படத்தின் மூலமாக ஹீரோவாக அவதாரம் எடுத்தார். பின்னர் இவர் கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா, வல்லவன், காளை, சிலம்பாட்டம், விண்ணை தாண்டி வருவாயா, வானம், ஒஸ்தி, போடா போடி, வாலு அச்சம் என்பது மடமையடா, செக்கச் சிவந்த வானம், மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக மாநாடு, வெந்து தணிந்தது காடு என்கிற இரண்டு படங்கள் வெளியாகி இருந்தது. இதில் மாநாடு திரைப்படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்தது. பல வருடங்களாக நல்ல படம் கொடுக்காமல் இருந்து வந்த சிம்புவிற்கு இந்த படம் திருப்புமுனையாக அமைந்திருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக கௌதம் வாசுதேவ் மேனனின் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது பத்து தல என்கிற படத்தில் நடித்திருக்கிறார் சிம்பு. கன்னடத்தில் சிவராஜ் குமார் நடித்த மிகப்பெரிய வெற்றி பெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் பத்து தல என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோகிரின் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தில் இருந்து முதல் சிங்களான “நம்ம சத்தம்” என்கிற பாடலின் லிரிக்ஸ் வீடியோவை படக் குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.

அந்த வீடியோ மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்தது. இந்த நிலையில் இன்று 5:31 மணிக்கு படத்தின் டீசர் வெளியாகும் என்று படக் குழுவினர் அறிவித்திருந்தனர். தற்போது படத்தில் இருந்து டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நீங்களும் அந்த டீசர் வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Sony Music South