நடிகர் பிரபுதேவா நடிப்பில் இன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் பஹீரா. இந்த திரைப்படம் குறித்து பொதுமக்கள் தங்களது விமர்சனத்தை கூறி வருகின்றனர். தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தவர் நடிகர் பிரபுதேவா. இவர் நடிப்பது மட்டுமில்லாமல் படங்களை இயக்குவது, தயாரிப்பது, டான்ஸ் மாஸ்டர் ஆகவும் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். இவர் பிரபல நடன இயக்குனர் சுந்தரம் மாஸ்டரின் மகன் ஆவார். இவர் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் தான் பஹீரா. ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான த்ரிஷா இல்லனா நயன்தாரா, சிம்பு நடித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன். இவர் இயக்கத்தில் தற்போது இந்த படம் உருவாகியிருக்கிறது. சைக்கோ திரில்லர் படமாக இந்த படத்தில் பிரபுதேவா பல கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். இவர்களுடன் சாக்ஷி அகர்வால், யாஷிகா ஆனந்த், ஜனனி, அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், காயத்ரி, சஞ்சிதா செட்டி என மொத்தம் ஏழு ஹீரோயின்கள் நடித்திருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல தடைகளுக்கும் பின்னர் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் இந்த படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் இதுபோன்ற A சான்றிதழ் படங்களை தொடர்ந்து இயக்கி வருவதால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். இந்த நிலையில் தான் எடுக்கும் கடைசி A சான்றிதழ் திரைப்படம் இதுதான் என்று சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த திரைப்படம் இந்து திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சிலர் இந்த படத்தை விமர்சித்தும் வருகின்றனர். படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். படம் டீசன்டாக இருக்கிறது, பிரபுதேவாவின் நடிப்பிற்காக ஒரு முறை இந்த படத்தை பார்க்கலாம். பாட்டுகள் எல்லாம் தேவையில்லாத ஒன்றாக இருக்கிறது. பின்னணி இசை ஓரளவுக்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. சிங்கிளாக இருக்கும் பசங்களை மட்டுமே இந்த படம் கவரும், மற்றபடி குடும்பத்துடன் இந்த படத்தை பார்க்க முடியாது என்று தங்களது விமர்சனங்களை கூறினர்.

முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதியை நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருக்கிறது. ஆனால் மூன்று பாடல்களுமே தேவையில்லாத பாடல்களாக இருக்கிறது. பிரபுதேவாவின் நடிப்பிற்காகவே இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம். மத்தபடி படத்தை கொண்டாடும் அளவிற்கு பெரிய அளவில் கதை ஒன்றும் இல்லை, மன்மதன் படத்தில் திருப்பி எடுத்து வைத்தது போல் இந்த படம் இருக்கிறது. இது சிங்கிள் பசங்களுக்கான என்டர்டைன்மென்ட் படம். குடும்பத்துடன் வந்து இந்த படத்தை பார்க்க முடியாது என்று தற்போது பொதுமக்கள் தங்களது விமர்சனங்களை கூறி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: BingooBox