பேத்தி நிலா பாப்பாவை கொஞ்சி விளையாடும் கோபி தாத்தா.! கோபி பகிர்ந்த அழகிய புகைப்படங்கள்.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடித்து வரும் சதீஷ்குமார் தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவின் மகளாக வரும் நிலா பாப்பாவை அவர் தூக்கிக் கொஞ்சும் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகளும் குவிந்து வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பல இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த தொடர்களில் ஒன்றாக இருக்கிறது பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கதாநாயகன் கோபிக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பாக்யா, இரண்டாவது மனைவி ராதிகா. இதில் முதல் மனைவி பாக்யாவிற்கு செழியன், எழில், இனியா என்று மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். செழியன் மற்றும் எழிலுக்கு திருமணமாகிவிட்டது. செழியனின் மனைவி ஜெனி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். மகன்கள் வளர்ந்து அவர்களே பிள்ளை பெறும் நேரத்தில் தற்போது கோபி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

பேத்தி நிலா பாப்பாவை கொஞ்சி விளையாடும் கோபி தாத்தா.! கோபி பகிர்ந்த அழகிய புகைப்படங்கள்.! 1
திருமண வயதில் பிள்ளைகளை வைத்துக்கொண்டு இப்படி இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறீர்களே என்று கோபி மீது பலரும் விமர்சனத்தை வைத்திருந்தனர். கோபியின் திருமண பிரச்சினைகள் முடிந்த பிறகு எழிலுக்கு அமிர்தா உடன் திருமணம் நடைபெற்றது. அமிர்தா கைக் குழந்தையுடன் வாழ்ந்து வரும் ஒரு விதவைப் பெண் ஆவார். அமிர்தா மற்றும் எழிலின் திருமணத்திற்கு கோபி, அவரது தாயார் ஈஸ்வரி, மூத்த மகன் செழியன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். அந்த எதிர்ப்புகள் அனைத்தையும் மீறி தற்போது எழில் மற்றும் அமிர்தா திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அமிர்தாவின் மகளாக நடிக்கும் நிலா பாப்பா தற்போது அழகாக அனைவரிடமும் பழகும் விதம் சீரியல் பார்க்கும் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. செழியன் மற்றும் ஈஸ்வரி பாட்டியின் அறைகளுக்கு செல்லும் நிலா பாப்பா அவர்களுடன் இணைந்து விளையாடிக் கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. நிலா பாப்பாதான் வீட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் நேற்று கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப. பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் நிலா பாப்பா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து இனிய மாலை வணக்கம், நிலா பாப்பாவும் அவருடைய தாத்தாவும் என்று அழகாக பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு கீழே க்யூட் தாத்தா கியூட் பேத்தி என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.! சீரியலில் கதைப்படி விரைவில் நிலா பாப்பாவும் கோபியும் இணையும் காட்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்