ஒரு காலத்தில் காமெடி ஜாம்பவான்களாக இருந்தவர்கள் கவுண்டமணி, செந்தில். இத்தனை ஆண்டுகள் ஓடிவிட்ட பிறகும் இவர்கள் இருவரின் காமெடியை பார்த்தால் சிரிக்காத ஆட்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு தமிழக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து இருந்தனர். வேறு காமெடியன்களே நிற்க முடியாத அளவிற்கு திரைத்துறையை ஆக்கிரமித்து இருந்தனர். இவர்கள் வாழைப்பழ காமெடியும், சொப்பன சுந்தரி காமெடியும் காலம் கடந்தும் நம்மை சிரிக்க வைக்கும். 80-களின் இறுதிகள் தொடங்கி இவர்கள் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு திரைத்துறையில் கெத்து காட்டினர் இருவரும்.

காமெடி மட்டுமில்லால் துணை வேடங்கள், குணசித்திர வேடங்களில் நடிப்பது போன்று நிறைய படங்களில் நடித்துள்ளார் கவுண்டமணி. எளிய பிண்ணனியில் பிறந்து வளர்ந்த இவர் மிகவும் கஷ்டப்பட்டு திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர். இவருக்கு ஜோடியாக கோவை சரளா பல படங்களில் நடித்துள்ளார். வயது மூப்பின் காரணமாக பின்னாளில் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் படத்தில் நடப்பதில் இருந்து முற்றிலுமாக விலகினார் கவுண்டமணி. பொது மேடைகளுக்கு, நிகழ்ச்சிக்கு வருவதும் குறைந்து போனது. Youtube Video Code Embed Credits: Behindwoods
வயதான பின் இவர் இறுதியாக கதாநாயகன் வேடம் ஏற்று நடித்த படம் 49-O . ஆனால் இந்த படம் சரியாக ஓடவில்லை. பிறகு நடிப்பதிலிருந்து முற்றிலுமாக விலகிவிட்டார். அவ்வபோது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் கவுண்டமணி. இன்று ஐசரி கணேஷ் அவர்களின் தந்தை ஐசரி வேலன் அவர்களின் சிலை திறப்பு விழாவிற்கு வந்த கவுண்டமணியை மேடைக்கு அழைத்து வந்தனர். அவரை வரவேற்க வந்த ராதிகா மற்றும் பாக்கியராஜிடம் ஏதோ சொல்ல அனைவரும் சிரித்துவிட்டனர். என்னதான் வயதானாலும் காமெடி கிங் அல்லவா.. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..