
ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் மனித உரிமைகள், தகவல் அறியும் உரிமை, ஊனமுற்றோரின் உரிமைகள் உள்ளிட்ட ஏழு அரசு ஆணையங்களை மூட உள்ளது மோடி அரசாங்கம்.
அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்கு பிறகு இந்த ஆணையங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான காரணங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
மூடு விழா காணும் ஜம்மூ காஷ்மீர் மாநில ஆணையங்கள்:
- ஜம்மு-காஷ்மீர் மாநில மனித உரிமைகள் ஆணையம் (எஸ்.எச்.ஆர்.சி)
- மாநில தகவல் ஆணையம் (SIC)
- இந்திய தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பாணையம் (எஸ்.சி.டி.ஆர்.சி)
- மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (SERC)
- மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம் (SCPWCR)
- மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையம் (SCPwD)
- மாநில பொறுப்புடைமை ஆணையம் (எஸ்ஏசி).
சமீபத்தில் ஜம்மூ காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மூ காஷ்மீர் மற்றும் லடாக் என தனியாக பிரிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து பல கட்ட முயற்சிகளை மோடி அரசாங்கம் நடத்தி வருகிறது. இதனால் தற்போது ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய ஆணையங்களை மூட உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே புதுச்சேரி மற்றும் டெல்லி மாநிலத்தில் இது போன்ற ஆணையங்கள் செல்யப்பட்டு வருகிறது. ஆனால் ஜம்மூ காஷ்மீர் மற்றும் லடாக் பிரதேசங்கள் மட்டும் ஏன் அதன் மனித உரிமைகளை இழக்க வேண்டுமென ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.