தனது தந்தைக்கு வண்டி வாங்கி பரிசளித்த ஜிபி முத்து.! தாத்தா முகத்துல எவ்வளோ சந்தோசம்.!

வெளியிட்டது

டிக்டாக் செயலின் மூலம் பிரபலமாகி இன்று தமிழ் திரையுலகின் பிரபல ரியாலிட்டி ஷோக்களாக இருக்கும் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் முக்கிய பங்காற்றி வருபவர் ஜி பி முத்து. தமிழ்நாட்டில் இவரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு தற்போது பிரபல கலைஞராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது ஜிபி முத்து தனது தந்தைக்கு புதிதாக வண்டி ஒன்றை வாங்கி பரிசளித்திருக்கிறார் அந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவிற்கு லைக்கள் குவிந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்தவர் ஜி பி முத்து. இவர் ஆரம்பத்தில் மரக்கடை தொழில் செய்து வந்தார். பின்னர் டிக் டாக் செயலி வந்தபோது அதற்கு அடிமையான இவர், தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். ஒரு நாளைக்கு 80 முதல் 90 வீடியோக்கள் வரை வெளியிட்டு வந்த அவர் இந்த செயலுக்கு அடிமையாக மாறிப் போயிருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனது தந்தைக்கு வண்டி வாங்கி பரிசளித்த ஜிபி முத்து.! தாத்தா முகத்துல எவ்வளோ சந்தோசம்.! 1

இந்த செயலியில் அவர் போடும் வீடியோக்களை திட்டி சிலர் கமெண்ட்கள் எழுத, அவர்களை செத்த பயலே நார பயலே என்று திட்டி பதில் வீடியோ போட ஆரம்பித்தார். இவரின் பேச்சு வழக்கினால் குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமானார். பின்னர் கொரோனா காலத்தில் டிக் டாக் செயலியும் முடங்கி விட்டதால் வருமானத்திற்கு வழியில்லாத ஜி பி முத்து தற்கொலைக்கும் முயன்று இருந்தார். அதன் பின்னர் youtube சேனல் ஒன்றை தொடங்கிய அவர், அந்த வருமானத்தின் மூலமாக தனது வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டார். மேலும் அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸில் 10 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அவர் ஒரு கட்டத்தில் தனது குழந்தைகள் மீது இருக்கும் பாசத்தினால் வீட்டில் இருந்து வெளியேறினார். தற்போது புது கார், புது வீடு என்று நல்ல வாழ்க்கை வாழ்ந்து வரும் ஜி பி முத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கெடுத்து வருகிறார்.

இந்த நிலையில் ஜி பி முத்து தற்போது புது வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் தனது தந்தைக்கு அவர் ஸ்கூட்டி ஒன்றை வாங்கி பரிசளித்திருக்கிறார். பலரும் ஜி பி முத்துவின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Gp Muthu Official

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்