பிக் பாஸில் கலந்து கொண்டுள்ள ஜிபி முத்துவி கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் பிக் பாஸை விட்டு வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பிக் பாஸ் சீசன் சிக்ஸ் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்த முறை 20 போட்டியாளர்களை களம் இறக்கி இருக்கிறது பிக் பாஸ். அது மட்டுமில்லாமல் நேற்று மைனா நந்தினியையும் உள்ளே அனுப்பி இருக்கிறது. 5 சீசன்களை தொகுத்து வழங்கியது போலவே தற்போது ஆறாவது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார் கமலஹாசன். ஜிபி முத்து, ராபர்ட் மாஸ்டர், திருநங்கை சிவின் கணேசன், மெட்டி ஒலி சாந்தி, அசீம், விஜே மகேஸ்வரி, அமுதவாணன் என பல முன்னணி பிரபலங்களை களம் இறக்கியுள்ளது பிக்பாஸ் டீம்.

சீசன் சிக்ஸ் ஆரம்பித்த நான்கு நாட்களிலேயே சண்டை சச்சரவு என தொடங்கியிருந்தது. கமலே 40 நாட்களில் நடக்க வேண்டிய நிகழ்வுகள் நான்கே நாட்களில் நடந்து வருவதாக கூறியிருந்தார். இதில் குறிப்பிடத்தக்க நபராக ஜி பி முத்து இருக்கிறார். வீட்டில் உள்ள அனைவருமே ஜிபி முத்துவை விரும்புகின்றனர். வீட்டின் பெஸ்ட் பெர்பார்மர் என்ற கேள்விக்கு ஜி பி முத்துவைபலரும் தேர்வு செய்து இருந்தனர். தான் பாத்திரம் கழுவும் அணியில் இருந்தாலும், உணவு சமைக்கும் அணிக்கு அவர் உதவி செய்தது பலரையும் நெகழ்ச்சி அடைய வைத்தது. அதற்கு அவர் விளக்கம் கூறும் பொழுது உணவு சமைப்பவர்கள் தனியாக நின்று கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள், அதனால் எனக்கு முடிந்த உதவியை செய்தேன் என்று விளக்கம் அளித்து இருந்தார். இதனால் ஜி பி முத்துவின் மீது இருந்த மரியாதை இன்னும் அதிகமானது.
இந்த நிலையில் ஜிபி முத்துவிற்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. நேற்று கமல் வரும் எபிசோடில் கலந்து கொண்ட ஜிபி முத்து அந்த எபிசோடு முடிந்த பின்னர் மிகுந்த காய்ச்சலால் அவதிப்பட்டு இருந்தார். வீட்டின் ஒரு மூலையில் இருக்கும் சோபாவில் படுத்து இருந்த அவரிடம் ரட்சிதா மகாலட்சுமி மாத்திரை கொடுத்து, இங்கே தூங்குங்கள் ஏதாவது வேண்டுமென்றால் என்னை கூப்பிடுங்கள். நீங்களே எழுந்து வராதீர்கள் ரெஸ்ட் எடுங்கள் என்று கூறிவிட்டு சென்றார். காய்ச்சல் அதிகமானதால் மருத்துவர் வரும்வரை அவர் அங்கே படுத்திருந்தார். இந்த நிலையில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால், சகப் போட்டியாளர்களுக்கும் இந்த காய்ச்சல் பரவக்கூடும் என்பதால் ஜிபி முத்து வீட்டிலிருந்து வெளியேற்றப்படலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. காய்ச்சல் சரியாகும் வரை ஜி பி முத்து தனிமைப்படுத்தப்படுவாரா அல்லது வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவாரா என்பது கூடிய விரைவில் தெரியவரும்.