கணவருடன் விவாகரத்து முடிவை எடுத்த விஜே அர்ச்சனா.! கண்ணீருடன் அவரே கூறிய தகவல்..!

நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் விஜே அர்ச்சனா. தற்போது அவர் தானும் தனது கணவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக புதிய செய்தியை கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார். கடந்த 23 ஆண்டுகளாக நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வலம் வருபவர் நடிகை அர்ச்சனா. இவ்வாறு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியை சிட்டிபாபு உடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் திருமணம் செய்து கொண்ட அவர் சில காலம் சின்னத்திரையில் இருந்து விலகி இருந்தார். பின்னர் மீண்டும் தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்த அர்ச்சனா, தற்போது பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். ஜீ தமிழில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அர்ச்சனாவை விஜய் டிவி கஷ்டப்பட்டு பிக்பாஸிற்கு இழுத்து வந்தது. பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் பல தனிப்பட்ட தாக்குதல்களுக்கு உள்ளானார். அவர் குறித்து ட்ரோல்கள் அதிகமாக வரத் தொடங்கின. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கணவருடன் விவாகரத்து முடிவை எடுத்த விஜே அர்ச்சனா.! கண்ணீருடன் அவரே கூறிய தகவல்..! 1
“அன்பு ஜெயிக்கும் என்று நீ நம்புறியா” என்று அவர் கேட்ட வசனம் இணையத்தில் மிகப் பிரபலமானது. அதன் பின்னர் தனது மகளுடன் இணைந்து youtube சேனல் ஒன்றை தொடங்கிய அவர் வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றி வந்தார். குறிப்பாக அவர் பதிவிட்ட பாத்ரூம் டூர் இணையத்தில் மிக வைரலானது. இந்த வீடியோவை பலரும் கிண்டல் அடித்து பதிவிட்டு இருந்தனர். இருந்த போதிலும் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அர்ச்சனா. அவரை தனியார் youtube சேனல் ஒன்று தற்போது பேட்டி எடுப்பதற்காக அழைத்துள்ளது. அதில் தாயாருடன் அர்ச்சனாவின் மகள் சாராவுடன் அந்த பேட்டியில் கலந்து கொண்டார். அர்ச்சனா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வினித் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வினித் நேவியில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிகளுக்கு சாரா என்கிற மகளும் இருக்கிறார். கடற்படையில் பணியாற்றி வருவதால் இருவரும் நிறைய நாட்கள் ஒன்றாக இணைந்து வாழ முடியாத சூழல் இருந்துள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு கொண்டே இருந்த்தாக அர்ச்சனா கூறினார்.

விளம்பரம்
தொடர்புடையவை  என்கூட பேசுங்க மாமா..! கண்ணீர் விட்டு அழுத மீனா..! மனம் இறங்கிய பாண்டி..! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ..!

கணவருடன் விவாகரத்து முடிவை எடுத்த விஜே அர்ச்சனா.! கண்ணீருடன் அவரே கூறிய தகவல்..! 3
விவாகரத்து குறித்து பேசிய விஜே அர்ச்சனா 20 ஆண்டுகளுக்கு முன்பு நாம் திருமணம் செய்து கொண்டோம். 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு விசாகப்பட்டினத்திற்கு மாறுதல் கிடைத்தது. இந்த பிக் பாஸ்க்கு பின்னர் வந்த நெகட்டிவிட்டி, பாத்ரூம் டூரால் வந்த நெகட்டிவிட்டி என அனைத்தையும் தாங்கிக் கொண்டு அவர் என்னுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடிவதில்லை, அதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விடலாம் என்று பேசினோம். ஒரு ஆண்டாகவே நான் விவாகரத்து செய்வதற்கு தேவையான ஆவணங்களை தயாரித்து வைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் தனது மகள் சாரா உனக்கு அப்பா தான் உலகம், அப்பாவிற்கும் உன்னை விட்டால் யாருமில்லை எனவே இருவரும் பிரிந்து வாழாதீர்கள் என்று கூறியதாகவும் அதனால் தன்னுடைய விவாகரத்தை கைவிட்டுவிட்டு 20 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி காதலித்தோமோ அதே போல் தற்போதும் காதலித்து வருவதாக கூறினார் அர்ச்சனா. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

தொடர்புடையவை  புதுத் தொழிலை தொடங்கிய சினேகன் கனிகா தம்பதிகள்.! என்ன பிசினஸ்ன்னு பாருங்க..!

Youtube Video Embed Code Credits: SS Music

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment