விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. விஜய் டிவியின் மிக முக்கிய நிகழ்ச்சியாக இது பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு புதிய டஸ்க்கை கொடுத்து அதில் சொதப்புவர்களை அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி வருகிறார்கள். உண்மையில் சமையல் போட்டியான இதில், பலரும் இதில் வரும் காமெடி காட்சிக்காகவே பார்த்து வருகிறாரகள்.

இந்த நிகழ்ச்சியில், அம்மு அபிராமி, தர்ஷன், கிரேஸ் கருணாஸ், ஸ்ருதிகா, அந்தோணி தாசன், மனோபாலா, ரோஷினி, சந்தோஷ், விடியுலேகா, ராகுல் தாத்தா, சுட்டி அரவிந்த் மற்றும் வைல்ட் கார்டு நுழைப்பாக முத்து ஆகியோர் பங்கெடுத்து உள்ளார். இதில், மனோபாலா, ராகுல் தாத்தா, சுட்டி அரவிந்த், அந்தோணி தாசன் ஆகியோர் முறையே வெளியேற்றப்பட்டனர்.
இந்தவார நிகழிச்சியில் இருந்து பாடகி கிரேஸ் வெளியேற்றப்பட்டார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான “கலக்கப்போவது யாரு, Mr. & Mrs. சின்னத்திரை” போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கெடுத்த இவர், இப்பொது இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கியுள்ளார். நடிகர் கருணாஸின் மனைவியான இவர் பல பாடல்களை பாடியுள்ளார்.
இப்பொது விஜய் டிவியின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சென்ற வார எலிமினேஷனில் வெளியேற்றப்பட்டுள்ளார். அனைவராலும் உண்மையில் அங்கிருந்த அனைவர்க்கும் கொஞ்சம் நெருடலை ஏற்படுத்தியது. போட்டியாளராகளும், கோமாளிகளும் இவருடைய வெளியேற்றத்தால் சற்று சோகத்திற்கு உள்ளானர்கள்.
இப்பொது அந்த போட்டியில் இருந்து வெளியேறியுள்ள கிராஸ், தன்னுடைய சமூகவலைத்தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர், “உண்மையில் இது எனக்கு கடினமாகவே உள்ளது. போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. எப்போதும் சமயல் என்னுடைய பணியாகும், உங்களை மகிழ்வித்ததில் நான் கொஞ்சம் சந்தோசப்படுகிறேன். போட்டி இதோட முடிந்து போக வில்லை.நான் மீண்டும் வைல்ட் கார்டு ரௌண்டில் இன்னும் வலுவாக சிறப்பாக திரும்பி வருவேன்” என பதிவிட்டுள்ளார்.
Video Courtesy – LittleTalks