நடிகர் சந்தானம் நடிப்பில் அடுத்துவெளிவரவுள்ள படம் “குலுகுலு”. மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கியுள்ளார். இவர் நடிகர் விஜயின் “மாஸ்டர்”, கமலின் “விக்ரம்” மற்றும் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ்- விஜய் கூட்டணியில் உருவாகவிருக்கும் “தளபதி 67” படத்திலும் வசனம் இயற்றவுள்ளார். இயங்குனர் லோகேஷ் கனகராஜின் நெருங்கிய வட்டத்தில் இவர் உள்ளார்.

சந்தானம் சின்னத்திரையிலிருந்து பெரிய திரையில் காமெடியனாக அறிமுகமாகி இப்பொது நாயகனாக மாறி கொஞ்ச கொஞ்சமாக வளர்ந்து வருகிறார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 போன்ற வணிக ரீதியிலான வெற்றி படங்களில் அவர் நடித்துள்ளார். இப்பொது இளம் இயக்குனர் ரத்னகுமாருடன் மாறுபட்ட கதைக்களத்தில் அவர் நடித்துள்ள படம் “குலுகுலு”. வருகிற ஜூலை 29ஆம் தேதி ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. கடத்தப்படும் தங்களுடைய நண்பனை மீட்டுக்கொடுக்க அலையும் 4 நண்பர்கள் ஊர் ஊராக சும்மா சுற்றித்திரியும் சந்தானத்திடம் உதவி கேட்கிறார்கள். அவர்களுக்கு சந்தானம் எப்படி உதவி புறிந்தார் என்பதை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. அந்த ட்ரைலரை நீங்களும் காண….
Video Courtesy – Suntv