நீண்ட யோசனைக்குப் பின் இந்த முடிவை எடுத்துள்ளோம் – சைந்தவியை பிரிந்தது குறித்து ஜிவி பிரகாஷ்.!

பாடகி சைந்தவியை பிரிவதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி பிரகாஷ். ஏ.ஆர் ரகுமானின் சகோதரியான ஏ.ஆர் ரொஹைனாவின் மகனான இவர் ‘வெயில்’ என்கிற படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பின்னர் பல நல்ல படங்களுக்கு இசையமைத்திருக்கும் இவர், நடிக்கும் ஆர்வத்தின் காரணமாக படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

நீண்ட யோசனைக்குப் பின் இந்த முடிவை எடுத்துள்ளோம் - சைந்தவியை பிரிந்தது குறித்து ஜிவி பிரகாஷ்.! 1

விளம்பரம்

பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பேச்சுலர், ஜெயில், செல்ஃபி, அடியே போன்ற படங்கள் எல்லாம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தன. இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் சைந்தவி இருவரும் பிரிய இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. சிறுவயதில் இருந்தே நல்ல நண்பர்களாக பழகி வந்த இவர்கள் ஒரு கட்டத்தில் காதலர்களாக மாறினார். 2013ம் ஆண்டு இருவரும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நான்கு வயதில் அன்வி என்கிற மகளும் இருந்த நிலையில் இவர்களின் விவாகரத்து சர்ச்சை இணையத்தில் வலம் வந்தது.

தொடர்புடையவை  18 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரமுகி-1 மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு.! வைரலாகும் வீடியோ.!

நீண்ட யோசனைக்குப் பின் இந்த முடிவை எடுத்துள்ளோம் - சைந்தவியை பிரிந்தது குறித்து ஜிவி பிரகாஷ்.! 3

விளம்பரம்

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் “நீண்ட யோசனைக்கு பிறகு நானும் சைந்தவியும், தனித்தனி பாதைகளில் பயணம் செய்ய முடிவெடுத்து இருக்கிறோம். 11 வருட பயணம் முடிவுக்கு வருகிறது. எங்களுடைய மன அமைதிக்காகவும், நன்மைக்காகவும் ஒருவரை முடிவை ஒருவர் மதித்து இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். இந்த முடிவை நண்பர்கள் மீடியா துறையினர் மற்றும் ரசிகர்கள் மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நீண்ட யோசனைக்குப் பின் இந்த முடிவை எடுத்துள்ளோம் - சைந்தவியை பிரிந்தது குறித்து ஜிவி பிரகாஷ்.! 5

விளம்பரம்

இது ஒரு சிறந்த முடிவாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். இந்த கடினமான காலத்தில் துணை நின்ற அனைவருக்கும் நன்றி. உங்களுடைய புரிதலுக்கும் ஆதரவுக்கும் நன்றி” சமந்தா – நாகசைதன்யா, தனுஷ் – ஐஷ்வர்யா ஜோடிகளை தொடர்ந்து திரையுலகில் அடுத்த விவாகரத்து நடந்துள்ளது. 

 

View this post on Instagram

 

A post shared by G.V.Prakash Kumar (@gvprakash)

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment