7 வயதில் சிக்கு புக்கு ரயிலை பாட வைத்த “பாட்டுக்கு பாட்டு” Anchor..27 வருடங்களுக்கு பின் மீண்டும் சந்தித்த ஜி வி பிரகாஷ்

வெளியிட்டது

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் அவர்களின் சகோதரி மகன்தான் ஜி.வி.பிரகாஷ் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவர் தற்போது தமிழின் முண்ணனி இசையமைப்பாளராக இருக்கிறார். இவரது இசைக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது மனைவி பிரபல பிண்ணனி பாடகி சைந்தவி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இசையமைப்பாளர் என்பதை தாண்டி சில படங்களிலும் நடித்துள்ளார் ஜி.வி பிரகாஷ் நடித்துள்ளார். பெரும்பாலும் இரட்டை அர்த்தங்கள், அடல்ட் ஜோக்குகள் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பதாக இவர் மீது விமர்சனங்கள் உண்டு.

7 வயதில் சிக்கு புக்கு ரயிலை பாட வைத்த "பாட்டுக்கு பாட்டு" Anchor..27 வருடங்களுக்கு பின் மீண்டும் சந்தித்த ஜி வி பிரகாஷ் 1

இவர் குழந்தையாக இருக்கும் போதே சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலை பாடினார். வெயில் என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன இவர் பின்னர் அங்காடித் தெரு, தலைவா, மயக்கம் என்ன படங்களில் இசையமைத்துள்ளார். பின்னர் நடிப்பில் ஆர்வம் வரவே டார்லிங், சிகப்பு மஞ்சள் பச்சை, த்ரிஷா இல்லைனா நயன்தாரா போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். கடைசியாக நடித்த படம் பேச்சுலர் இது பல எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று இருந்தது. இவர் நடித்த படங்கள் அனைத்துமே ஏதாவது சர்ச்சைக்கு உள்ளாவது வழக்கம். தற்போது ஐங்கரன் என்ற படத்திலும், இடிமுழக்கம் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் ஒரு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதாவது சன் டிவியில் ஒளிபரப்பான பாட்டுக்கு பாட்டு என்ற நிகழ்ச்சியை யாராலும் மறந்திருக்க முடயாது. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் இலங்கையை சேர்ந்த அப்துல் ஹமீது என்பவர். ஜிவி சிறு வயதில் சிக்கு புக்கு பாடலை பாடிய போது அப்துல் ஹமீது அவரை நேர்காணல் செய்து இருந்தார். அந்த வீடியோவையும், தற்போது ஏ.ஆர். ரகுமான் மகள் கதீஜாவின் திருமண வரவேற்பின் போது அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து 27 ஆண்டுகளுக்குப் பின் அதே நபரை சந்திக்கிறேன் என்று அப்துல் ஹமீதுவுடன் தான் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்