Categories: சினிமா

வருங்கால கணவரின் முதல் திருமணத்தில் குத்தாட்டம் போட்டுள்ள ஹன்சிகா.! வைரலாகும் வீடியோ

வெளியிட்டது

நடிகை ஹன்சிகாவின் வருங்கால கணவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துள்ளது. அவர்களின் திருமணத்திற்கு அப்போது சென்றிருந்த ஹன்சிகா குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக சீரியல்களில் நடிக்க தொடங்கி என்று முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஹன்சிகா. இவர் ஷக்கலக்க பூம்பூம் என்ற ஒரு தொடரில் நடிக்க ஆரம்பித்து, 2007 ஆம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அடி எடுத்து வைத்தார். அன்று தொடங்கி இன்று வரை 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். எங்கேயும் காதல், மான் கராத்தே, அரண்மனை, மனிதன் போன்ற படங்கள் ஹன்சிகாவின் நடிப்பில் வெளியான சிறந்த படங்களுக்கு உதாரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வருங்கால கணவரின் முதல் திருமணத்தில் குத்தாட்டம் போட்டுள்ள ஹன்சிகா.! வைரலாகும் வீடியோ 1

தற்போது தமிழில் நான்கு படங்களும் தெலுங்கில் இரண்டு படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் ஹன்சிகா. இவர் தனது நண்பர் சுஹைல் கத்தோரியாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஹன்சிகாவே தனது instagram பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். அதில் பிரான்சில் ஈபில் டவர் முன்பு நின்று ஹன்சிகாவிற்கு சுஹேல் ப்ரபோஸ் செய்வது போலவும், பின்பு மோதிரம் மாற்றிக் கொள்வதும் போன்று தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை அவர் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் ஹன்சிகாவின் கணவர் பற்றி ஒரு செய்தி இணையத்தில் தீவிரமாக பரவி வருகிறது.

அதாவது ஹன்சிகாவின் வருங்கால கணவர் சுஹைலுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்திருக்கிறது. சுஹேலின் முதல் மனைவியும் ஹன்சிகாவும் நல்ல நண்பர்கள்ழ எனவே அந்த திருமணத்திற்கு சென்றுள்ள ஹன்சிகா அவர்களின் திருமணத்தில் குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the below video.!

Youtube Video Code Embed Credits: The Wedding Story

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்