நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம் நேற்று நள்ளிரவு ஜெய்ப்பூர் அரண்மனையில் வைத்து நடைபெற்ற நிலையில், தற்போது அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் ஹன்சிகா நடித்து வருகிறார்.
தற்போது கைவசம் ஆறு படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா. அதில் தமிழில் மட்டும் நான்கு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தனது நண்பரும் தொழிலதிபருமான சுஹேல் கத்தூரியாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்திருந்தார்.
இருவரும் பிரான்சில் உள்ள ஈஃபிள் டவர் முன்பாக நின்று மோதிரம் மாற்றி தங்களது காதலை உறுதி செய்தனர். மேலும் சுஹேல் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். சுஹேலின் முதல் மனைவியும் ஹன்சிகாவும் நெருங்கிய தோழிகள் ஆவர். அந்த திருமணத்திற்கும் ஹன்சிகா சென்று நடனமாடிருந்த வீடியோ சமீபத்தில் வைரல் ஆகி இருந்தது.
இந்த நிலையில் நேற்று ஹன்சிகாவின் திருமணம் முடிந்துள்ளது. சிகப்பு நிற லெஹங்காவில் தேவதை போல் ஜொலித்தார் ஹன்சிகா. இவர்களது திருமணம் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் அரண்மனையில் வைத்து நடைபெற்றது.
450 ஆண்டுகால பழமையான ஜெய்ப்பூர் அரண்மனை ஹன்சிகாவின் திருமணத்திற்காக புதுப்பிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு இவர்களின் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
திருமணத்திற்கு முன்பாக நடத்தப்படும் மெஹந்தி நிகழ்வுகள், வரவேற்பில் பிங்க் நிழல் லெஹங்கா உடன் ஜொலித்தார் ஹன்சிகா. மேலும் திருமணத்திற்கு முன்பு நடந்த பார்ட்டி வீடியோக்களும் இணையத்தில் வெளியாகியிருந்தது.
தற்போது ஜெய்ப்பூர் அரண்மனையில் மேல்மாடத்தில் நின்று இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். பின்பு ஹன்சிகாவிற்கு தாலி அணிவித்து அவரது நெற்றியில் குங்குமம் வைத்தார் அவரது கணவர் சுஹேல் கத்தூரியா.
நயன்தாரா போலவே ஹன்சிகாவின் திருமண வீடியோவை ஓடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டாருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.