பிரபல முன்னணி நடிகை ஹன்சிகாவிற்கு தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. பிரான்சில் உள்ள ஈபிள் டவர் முன்பாக நின்று கொண்டு அவர்கள் தங்கள் நிச்சயதார்த்தத்தை நடத்தி இருக்கின்றனர். அந்த புகைப்படங்களை ஹன்சிகாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். கர்நாடகா மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் ஹன்சிகா. ஆரம்பத்தில் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த தொடங்கினார்.

சுமார் 6 தொலைக்காட்சி தொடர்களில் நடித்த இவர், 2007 ஆம் ஆண்டு வெள்ளித்திரையில் நடிக்க தொடங்கினார். முதன் முதலாக மாப்பிள்ளை படத்தின் மூலமாக அறிமுகமானார். தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார் ஹன்சிகா. இவர் நடிப்பில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி, மான் கராத்தே, அரண்மனை, மனிதன் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
ஷக்லக்க பூம்பூம் என்ற பென்சில் மூலம் வரைந்தால் அது உருவமாக மாறும் தொடரில் இவர் முதன் முதலில் நடித்தார். பிறகு படங்களில் நடிக்க தொடங்கிய அவர் 60 படங்களுக்கு மேல் நடித்து முடித்துள்ளார். தற்போது தமிழில் நான்கு படங்களும், தெலுங்கில் இரண்டு படங்களும் நடித்து வருகிறார் ஹன்சிகா.
தனது நண்பரும் தொழிலதிபருமான சொகேல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இவர்களது திருமணம் டிசம்பர் 4ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற இருப்பதாகவும், அதற்காக 450 ஆண்டு காலம் பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையை புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இன்று இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
அந்த புகைப்படங்களை ஹன்சிகாவே தனது இன்ஸ்டாகிராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பிரான்சில் உள்ள ஈபிள் டவர் முன்பாக இருவரும் மோதிரம் மாற்றி, நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளனர்.
அந்த புகைப்படத்தை பகிர்ந்து இப்பொழுதும் எப்பொழுதும் என்று பதிவிட்டு இருக்கிறார் ஹன்சிகா. இந்த பதிவிற்கு குஷ்பூ, டிடி, வருண் தவான் போன்ற பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அவருக்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.