துணிவு படத்திற்காக பிக்பாஸ் அமீர் டப்பிங் பேசி வரும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தல அஜித் குமார் நடிப்பில் 61-வது படமாக உருவாகி வரும் படம்தான் துணிவு. இந்த படத்தை எச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்து வருகிறார். மூன்றாவது முறையாக இதே கூட்டணி இணைந்துள்ளது. இவர்கள் கூட்டணியில் கடைசியாக வெளிவந்த வலிமை படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் மீண்டும் இதே கூட்டணி இணைந்து புதிய படத்தில் கமிட் ஆகி இருக்கிறது. இந்த புதிய படத்தில் அஜித்குமார் வெகு நாட்களுக்குப் பிறகு இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் பிக்பாஸை சேர்ந்த அமீர் பாவனி மற்றும் சிபி சக்கரவர்த்தி ஆகியோர் நடித்து வருகின்றனர். இதற்காக அவர்களும் ஹைதராபாத்திற்கு சூட்டிங் சென்ற புகைப்படங்களை சமீபத்தில் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தனர். மேலும் அஜித்துடன் இணைந்து இரவு நேரத்தில் கடையில் அமர்ந்து சாப்பிடுவது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தனர். படம் முடியும் தருவாயில் இருப்பதால் டப்பிங் பணிகள் வேகமெடுத்து இருக்கின்றன. சமீபத்தில் படத்தின் கதாநாயகி மஞ்சு வாரியர் கூட டப்பிங் பேசும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருந்தார்.

இந்த நிலையில் அமீரும் டப்பிங் பேசும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். படத்தின் பணிகள் 90% முடிந்து சண்டை காட்சிகளுக்காக படம் குழு தாய்லாந்து செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. துணிவு படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என அதன் தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் அறிவித்திருக்கிறார். இரண்டு மாதங்களே உள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் வேதம் எடுத்து உள்ளன. விரைவில் படத்தின் டீசர் ட்ரைலர் பாடல்கள் என அனைத்தையும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
