நடிகை ஹன்சிகா திருமணம் செய்ய உள்ள நபர் மற்றும் திருமண தேதி தற்போது வெளியாகியுள்ளது. ஹன்சிகாவின் திருமணத்திற்க்காக தற்போது ஜெய்ப்பூர் அரண்மனை பிரம்மாண்டமாக தயார் ஆகி வருகிறது. மங்களூருவில் பிறந்தவர் ஹன்சிகா. இவர் ஆரம்பத்தில் ஷக்கலக்கா பூம் பூம் என்றழைக்கப்பட்ட தொடரின் மூலம் ஹன்சிகா அவரது தொலைக்காட்சிப் பயணத்தைத் தொடங்கினார். 2003ம் ஆண்டு முதல் திரையுலகில் நடித்து வருகிறார் ஹன்சிகா. அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, தீயா வேலை செய்யணும் குமாரு, மான் கராத்தே, அரண்மனை, மனிதன் போன்ற படங்களில் நடித்தார்.

தற்போது வரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார் ஹன்சிகா. தற்போது தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 2 படங்கள் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஹன்சிகாவுக்கு தொழிலதிபவர் ஒருவருடன் டிசம்பர் 4ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாப்பிள்ளை யார் என்ற ஆர்வம் ஹன்சிகாவின் ரசிகர்கள் மத்தியில் தொற்றிக் கொள்ள அவரின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஹன்சிகாவின் நீண்டநாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சுகைல் கதூரியா என்பவரை திருமணம் செய்ய உள்ளார். டிசம்பர் 4ம் தேதியில் ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணம் நடைபெற உள்ளது.

இதற்காக பழமை வாய்ந்த 450 ஆண்டுகால கோட்டை மற்றும் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து படங்களில் நடிக்க இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக பல படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார் ஹன்சிகா. 2013ம் ஆண்டு ஹன்சிகாவுக்கும், சிம்புவுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும், இருவரும் காதலித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் இருவரும் டேட்டிங்கும் செய்து வந்தனர். பின்பு சில காரணங்களால் இந்த காதல் ஜோடி பிரிந்து விட்டது. இந்த நிலையில் ஹன்சிகாவுக்கு டிசம்பர் 5ம் தேதி திருமணம் நடைபெற இருப்பது உறுதியாகியுள்ளது.
