கயல் சீரியல் நடிகை அபிக்கு நடந்த வளைகாப்பு.! வெளியான அழகிய வீடியோ.!

கயல் சீரியலில் ஆனந்தி கதாபாத்திரத்தில் நடித்து வந்த அபிநவ்யாவுக்கு தற்போது வளைகாப்பு முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் அபி. சன் டிவியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் கயல். இந்த தொடரில் ஆல்யா மானசாவின் கணவர் சஞ்சீவும், சைத்ரா ரெட்டியும் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு இந்த தொடருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக ஹீரோயின் சைத்ரா ரெட்டிக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதற்கு இணையாக கயலின் கடைசி தங்கையாக ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அபிநவ்யா. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

கயல் சீரியல் நடிகை அபிக்கு நடந்த வளைகாப்பு.! வெளியான அழகிய வீடியோ.! 1

விளம்பரம்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்கிற தொடரில் சுவாதி என்ற கதாபாத்திரத்திலும், கண்மணி தொடரில் சினேகா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்தவர் அபிநவ்யா. செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையை தொடங்கிய அவர், சீரியல்களில் நடிக்கும் ஆர்வத்தின் காரணமாக சின்னத்திரை பக்கம் தலைகாட்டத் தொடங்கினார். கயல் சீரியலில் நடித்து வந்த அவர் தற்போது சீரியலில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு கேக் வெட்டி வழியனுப்பி உள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் அபி. அவரை மிகவும் மிஸ் செய்வதாக அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தனது திறமையான நடிப்பால் பல ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கும் அபி நவ்யாவுக்கும் சீரியல் நடிகர் தீபக்குமார் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. தீபக்கும் அபியும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

விளம்பரம்

தீபக் ஏற்கனவே கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலில் நடித்திருந்தார். பின்னர் என்றென்றும் புன்னகை என்கிற சீரியலில் நடித்திருந்தார். தற்போது அவர் ஈரமான ரோஜாவே சீசன் 2 விலும் நடித்து வருகிறார். தற்போது அபி கர்ப்பமாக இருக்கும் செய்தியை புகைப்படங்களுடன் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து இருக்கிறார். தீபக்கும் அபியும் சேர்ந்து மெட்டர்னிட்டி புகைப்படத்தை நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கின்றனர். தற்போது இவருக்கு வளைகாப்பு முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் அபி. அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றனர். Watch the below Video.! 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்

Leave a Comment