திருமண விஷயத்தில் நயன்தாராவை அப்படியே காபி அடித்துள்ள ஹன்சிகா.! என்னனு தெரியுமா?

வெளியிட்டது

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் ஹன்சிகாவின் திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமையை பிரபல ஓடிடு நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நயன்தாராவை அப்படியே பின்பற்றி ஹன்சிகாவும் தனது திருமண வீடியோவை ஓடிடி தளத்திற்கு விற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

திருமண விஷயத்தில் நயன்தாராவை அப்படியே காபி அடித்துள்ள ஹன்சிகா.! என்னனு தெரியுமா? 1
நடிகை ஹன்சிகா மோத்வானி தொழிலதிபரும், தனது நண்பருமான சுஹேல் கத்தூரியா என்பவரை டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். மங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் தெலுங்கு, மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் சரளமாக பேசக் கூடியவர். மும்பையில் வளர்ந்த இவர் முதலில் தெலுங்கு படம் ஒன்றில் நடித்த தொடங்கினார்.

குழந்தை நட்சத்திரமாக படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். 2003 ஆம் ஆண்டு வெளியான ஷக்லக்க பூம்பூம் என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ்பெற்றார். பின்னர் 2007 ஆம் ஆண்டு தெலுங்கு படம் ஒன்றில் நடித்து இவர் திரைத்துறைக்குள் அடி எடுத்து வைத்தார்.

2011 ஆம் ஆண்டு தமிழில் மட்டுமே மூன்று படங்களில் நடித்திருந்தார். வேலாயுதம், மாப்பிள்ளை, எங்கேயும் காதல் போன்ற மூன்று படங்களில் அவர் நடித்தார். இதில் எங்கேயும் காதல் திரைப்பட அவருக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தின் மூலமாக ரசிகர்கள் பெருகினர்.

பின்னர் அவர் ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே அரண்மனை, மனிதன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அவர் கடைசியாக நடித்த திரைப்படம் மகா. தற்போது கைவசம் நான்கு தமிழ் படங்கள் மற்றும் இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.


சமீபத்தில் அவர் தனது காதலரை அறிமுகப்படுத்தினார். பிரான்சில் உள்ள ஈபில் டவர் முன்பு இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவர்கள் இருவருக்கும் டிசம்பர் நான்காம் தேதி ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணம் நடைபெற உள்ளது.


ஹன்சிகாவின் வருங்கால கணவர் சுஹேல் ஏற்கனவே திருமணம் ஆனவர். சுஹேலின் முதல் மனைவியும் ஹன்சிகாவும் நெருங்கிய தோழிகள். அந்த திருமணத்திற்கு ஹன்சிகா சென்று நடனம் ஆடிய வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. முதல் மனைவியை விவாகரத்து செய்ததால் இரண்டாவதாக ஹன்சிகாவை சுரேஷ் திருமணம் செய்ய இருக்கிறார்.


இவர்களின் திருமண வீடியோ டிஸ்னி hotstar-ல் ஒளிபரப்பு செய்ய இருப்பதாகவும் நயன்தாரா வழியில் தங்களது திருமண வீடியோவை டிஸ்னிக்கு ஹன்சிகா விற்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்