இயக்குனர் பார்த்திபனை அமேசான் பிரைம் நிறுவனம் பயங்கரமாக அசிங்கப்படுத்தி இருக்கிறது. பார்த்திபன் தவறான தகவல்களை பரப்பி வருகிறார் என்றும் அந்த நிறுவனம் “இரவின் நிழல்” படத்தின் குறிப்பில் தெரிவித்து இருக்கிறது. தமிழில் திரையுலகில் நடிகராகவும், இயக்குனராகவும் இருப்பவர் பார்த்திபன். இவர் சமீபத்தில் இரவின் நிழல் என்கிற படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் பார்த்திபன், யூடியூப் பிரபலம் பிரிகிடா, ரேகா நாயர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் உலகத்திலேயே முதன் முறையாக எடுக்கப்பட்ட நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்று பார்த்திபன் தொடர்ந்து கூறி வந்தார். பலரும் இந்த முறையில் எடுக்கப்பட்ட முதல் படம் இரவின் நிழல் இல்லை, அதற்கு முன்பே ஹாலிவுட் படம் வெளிவந்துள்ளதாக ஆதாரங்களுடன் கூறி வந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இது குறித்து தொடர்ந்து பேசி வந்தார். மேலும் பார்த்திபன் குறித்து தனிப்பட்ட முறையிலும் அவர் தாக்குதல் தொடுக்க தொடங்கினா.ர் பார்த்திபன் ஒரு அவார்ட் பைத்தியம், இது முதல் நான்கு லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்று தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார் என்று பார்த்திபன் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வந்தார் ப்ளூ சட்டை மாறன். இதற்கு பார்த்திபனும் தக்க பதிலடி கொடுத்து வந்தார். மூன்று லட்சம் ரூபாய் கொடுத்தால் இரவின் நிழல் படத்தை நன்றாக விமர்சனம் செய்வோம் என்று ப்ளூ சட்டை மாறன் கூறியதாக பார்த்திபன் கூறி வந்தார். இந்த பிரச்சனைகள் தற்போது ஓய்ந்த நிலையில் மீண்டும் இரவின் நிழல் படம் குறித்த சர்ச்சை தற்போது எழுந்திருக்கிறது.
இரவின் நிழல் திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பார்த்திபனையும் இரவின் நிழல் படத்தையும் அமேசான் நிறுவனம் அசிங்கப்படுத்தி இருக்கிறது. அதாவது இரவின் நிழல் திரைப்படம் முதல் நான் லீனியர் சிங்கிள் சார்ட் திரைப்படம் இல்லை. இது முதல் நான் லீனியர் படம் என்று இந்த படத்தின் இயக்குனர் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். இது இரண்டாவது நான் லீனியர் திரைப்படம் என்று படத்தின் குறிப்பில் அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் இவ்வாறு பதிவிட்டு இருக்கிறது. Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Parthiban Radhakrishnan