சமந்தா தற்போது புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பானா காத்தாடி என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகருக்கு அறிமுகமானவர் நடிகை சமந்தா. இவர் ஆரம்பத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் ஆரம்பத்தில் சில விளம்பர படங்களில் நடிகையாக நடித்தார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் இவர் அறிமுக நடிகையாக நடித்தார். அதன் பின்னர் தமிழில் நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், கத்தி, தங்க மகன், தெறி, 24 என பல படங்களில் நடித்து முடித்திருக்கிறார். குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்திருக்கிறார் சமந்தா.

இவர் கடைசியாக நடித்து வெளிவந்துள்ள படம் தான் யசோதா. வாடகை தாய்கள் முறை குறித்தும், அவர்கள் படும் கஷ்டங்கள் குறித்தும் இந்த படம் எடுக்கப்பட்டது. சில மாதங்களாக சமந்தாவுக்கு உடல்நிலை சரியில்லை. அவருக்கு தானாக நோய் எதிர்ப்பு சக்தி குறையும் நோய் இருக்கிறது. இது மிகவும் ஆபத்தான நோயாகும். இந்த நோயுடன் தான் போராடிக் கொண்டிருப்பதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் கண் கலங்கி கூறியிருந்தார். இதற்காக அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். யசோதா படத்தின் டப்பிங் கூட அவர் மருத்துவமனையில் இருந்து தான் பேசியிருந்தார். இந்த நிலையில் யசோதா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமந்தாவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர் தற்போது அவரின் உடற்பயிற்சியாளரும் அவரை பாராட்டி அவருக்கு இனிப்புகள் வழங்கி இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார் சமந்தா.

உடற்பயிற்சியாளரை கட்டி அணைத்து இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டு இந்த ஜிலேபிக்கு தகுதியாக நான் என்ன செய்தேன் என்று தெரியவில்லை. ஆனால் இன்று யசோதாவின் வெற்றியை கொண்டாடவும் ஆக்ஷன் காட்சிகளை கொண்டாடியும் இந்த இனிப்புகளை வழங்கியிருக்கிறீர்கள். நீங்கள் என்னை ஒருபோதும் கைவிட மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். கடந்த சில மாதங்களாக என்னை பார்த்துக் கொண்டிருக்கும் நபர்களின் நீங்களும் ஒருவர். நான் மிகவும் கீழாக உணர்ந்தேன். சோர்வாகவும், கண்ணீருடனும், அதிக டோஸ் ஸ்டீராய்டு மருந்துகளுடனும் இருந்தேன். ஆனால் நீங்கள் என்னை விட்டுக் கொடுக்கவில்லை. என்னை ஒருபோதும் கைவிட மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும், நன்றி என்று பதிவிட்டு இருக்கிறார்.
