Categories: சினிமா

கணவருடன் சேர்ந்து 21-வது திருமண நாளை கொண்டாடிய ப்ரீத்தா விஜயகுமார்.! அழகிய புகைப்படங்கள்.!

வெளியிட்டது

இயக்குனர் ஹரிக்கும் ப்ரீத்தாவுக்கும் திருமணமாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு தனது கணவரை வாழ்த்தியிருக்கிறார் ப்ரீத்தா. அந்த அழகான தம்பதிகளுக்கு ரசிகர்கள் தற்போது தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

கணவருடன் சேர்ந்து 21-வது திருமண நாளை கொண்டாடிய ப்ரீத்தா விஜயகுமார்.! அழகிய புகைப்படங்கள்.! 1
விக்ரமை வைத்து 2003 ஆம் ஆண்டு சாமி என்கிற படத்தை இயக்கியதன் மூலமாக தமிழ் திரையுலகுக்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஹரி. அதன் பின்னர் அவர் கோவில், தாமிரபரணி, அருள், ஐயா, வேல், சிங்கம் போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார்.


நடிகர் சூர்யாவை வைத்து மட்டும் சிங்கம் பாகம் ஒன்று, இரண்டு, மூன்று என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். கடைசியாக தனது மனைவி பிரீத்தாவின் அண்ணன் அருண் விஜயை வைத்து யானை என்கிற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தற்போது கைவசம் விஷாலின் 34-வது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை விஷாலின் சொந்த நிறுவனமே தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் இயக்குனர் ஹரி பிரபல நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகளான ப்ரீத்தா விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள்.

 

ப்ரீத்தா ஏற்கனவே சந்திப்போமா, படையப்பா, சுயம்வரம், புன்னகை தேசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். 2002 ஆம் ஆண்டு திருமணத்திற்கு பின்னர் முற்றிலும் திரையுலகையை விட்டு விலகி இருந்தார்.


ப்ரீத்தாவுக்கு வனிதா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார் என்கிற இரண்டு சகோதரிகள் இருக்கின்றனர். மேலும் விஜயகுமாரின் மூத்த மனைவிக்கு அருண் விஜய், அனிதா, கவிதா என்கிற மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். மிகப்பெரிய குடும்பமாக இருக்கும் இவர்களது குடும்ப புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருவது வழக்கமாக இருக்கிறது.

சமீபத்தில் கூட விஜயகுமார் நடத்தி வந்த தியேட்டர் ஒன்றை மறுசீரமைத்து அதற்கு குட்லக் ஸ்டுடியோஸ் என்று பெயரிட்டு தனது மனைவியை அந்த நிறுவனத்தில் மேனேஜராக பதவி அமர்த்தி இருந்தார் இயக்குனர் ஹரி. டப்பிங் போன்ற பணிகளுக்காக அந்த ஸ்டூடியோ செயல்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று ப்ரீத்தா விஜயகுமார் தனது 21 வது திருமண நாளை கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. பலரும் ஹரி ப்ரீத்தா தம்பதிகளுக்கு தங்களது திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்