இயக்குனர் மணிரத்தினம் மற்றும் நடிகர் பிரபுவை நடிகர் ஜெயராம் கலாய்த்த முழு வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகர் ஜெயராம், திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக மிமிக்கிரி செய்து தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தார். அவரது மகன் காளிதாஸ் ஜெயராமும் பிரபல நடிகராக இருக்கிறார். பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள ஜெயராம் ஒரு சிறந்த சென்டை மேள கலைஞர் ஆவார். அதுமட்டுமில்லாமல் மிமிக்கிரி செய்வது, ஸ்டாண்ட் அப் காமெடி செய்வது என்று பன்முகத்திறமையாளராக இருந்து வருகிறார். இவர் நடிப்புக்கு ஒரு மணிமகுடமாக அமைந்தது என்று சொன்னால் அது பஞ்சதந்திரம் தான். அந்த படத்தில் இவர் மிக காமெடியாக நடித்திருப்பார். அதே போல் கமலுடன் இணைந்து மற்றொரு படமான தெனாலி படத்திலும் இவர் காமெடி செய்திருப்பார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

தற்போது ஜெயராம் பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார்கடியான் நம்பி கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த கதையில் ஒரு கற்பனை என்றாலும் கதாநாயகனுடன் கடைசி வரை இணைந்து பயணிக்கும் ஒரு அழகான கதாபாத்திரமாகும். கதாநாயகன் வந்தியதேவன் ஆபத்துகளில் மாட்டிக் கொள்ளும் போது, அவனை தனது மதி நுட்பத்தால் காப்பாற்றும் ஒரு கேரக்டர் தான் ஆழ்வார்கடியான் நம்பி. இதற்காக ஜெயராம் மிக சிரமப்பட்டு நடித்திருக்கிறார். ஆழ்வார்கடியான் நம்பியின் உயரம் மிக குறைவாக இருக்கும். ஆனால் நெட்டையாக இருக்கும் ஜெயராம் கஷ்டப்பட்டு தனது உயரத்தை குறைத்து நடித்து இருக்கிறார். படத்திற்காக தொப்பை எல்லாம் வளர்த்து நடித்திருக்கிறார்.

நாளை தமிழகத்தில் மட்டும் 750 திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது இந்த படம். இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பொன்னியின் செல்வன் பாடல் மற்றும் டீசர் வெளியீட்டு விழாவின் போது ஜெயராம் மணிரத்தினம் மற்றும் பிரபுவை மிமிக்ரி செய்து கலாய்த்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் இருவரையும் மரணமாக கலாய்த்து தள்ளி இருக்கிறார் ஜெயராம். அவர் மிமிக்ரி செய்யும்பொழுது அரங்கமே அதிர்ந்தது. கமல், ரஜினி கூட குலுங்கி குலுங்கி சிரித்தார்கள். அதன் முழு வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..
YouTube Video Code Embed Credits: Sun Tv