ஆக்ஷன் நாயகனாக மாறும் ஹரிஷ் கல்யாண்!! அதுல்யா ரவி- ஹரிஷ் கல்யாண் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!!

வெளியிட்டது

நடிகை அமலா பாலின் சர்ச்சைக் கிளப்பிய படமான “சிந்து சமவெளி” படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். 2010ஆம் ஆண்டே இந்த படம் வெளியாகிருந்தாலும் ஹரிஷ் கல்யாண் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. பின்னர் “அரிது அரிது”, “சட்டப்படி குற்றம்”, “சந்தமாமா” போன்ற படங்களில் நடித்து இருந்தாலும் முதல் முறையாக மக்களின் கவனத்தை ஈர்த்த படம் “பொறியாளன்” படமே. 2014ஆம் ஆண்டு வெளியான இந்த படம் இவருக்கு கொஞ்ச அறிமுகத்தை மக்களிடம் கொடுத்தது.

ஆக்ஷன் நாயகனாக மாறும் ஹரிஷ் கல்யாண்!! அதுல்யா ரவி- ஹரிஷ் கல்யாண் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!! 1

பிறகு “வில் அம்பு” படத்திலும் கொஞ்சம் கவனம் ஈர்த்தார். நடிகர் கமல் தொகுத்து வழங்கிய விஜய் டிவியின் பிக் பாஸ் முதல் சீசனில் “Wild Card” என்ட்ரி கொடுத்து கடைசி வரையில் அந்த போட்டியில் இருந்து, ரன்னராக முடித்தார். இதுவே இவருடைய வாழ்வின் மிக முக்கிய திருப்புமுனையை கொடுத்தது. முக்கியமாக தமிழக மக்களிடம் நல்ல அறிமுகத்தை பெற்றார். அதுமட்டுமின்றி நல்ல பண்பான மனிதராக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்த நிகழ்ச்சி கொடுத்த அறிமுகம் அடுத்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்த “பியார் பிரேமா காதல்” படத்தில் நாயகனாக நடித்தார். அப்படத்தில் நாயகியாக மற்றொரு பிக் பாஸ் பிரபலம் ரைசா நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி பாடல்கள் மற்றும் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற தன்னுடைய முதல் முக்கிய வெற்றி படத்தை கொடுத்தார் ஹரிஷ் கல்யாண்.

அதன் பின்னர் இவர் நடித்த “இஸ்படே ராஜேவும் இதய ராணியும்” படம் மற்றொரு மிக பெரிய வெற்றியை ரசிகர்களிடம் பெற்றது. குறிப்பாக இளம் ரசிகர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் கொடுத்தது. கடந்த 2020ஆம் ஆண்டு இவர் நடிப்பில், விவேக், தான்யா நடித்த “தாராள பிரபு” படம் இவருடைய சினிமா வாழ்க்கையில் மிக பெரிய வெற்றியை பதிவு செய்தது. அடல்ட் கன்டென்ட்டாக இருந்தும் காமெடியில் படம் நன்றாக வொர்கவுட் ஆகி மிக பெரிய வெற்றியை பதிவு செய்தது.

இதனை அடுத்து இவர் இப்போது, “நூறு கோடி வானவில்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் நடித்து  படம், ‘டீசல்’. இதில் அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். இப்படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். ஜி.வி.பிரகாஷ்  நடிப்பில் வெளியான “அடங்காதே” படத்தை இயக்கியவர் சண்முகம் முத்துசாமி.

தேர்ட் ஐ என்டர்டெய்ன்மென்ட் வழங்க, எஸ்.பி. சினிமாஸ் தயாரிக்கிறது. எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்யும் செய்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்து பேசியுள்ள இயக்குநர் சண்முகம் முத்துசாமி , ‘‘இது காதல் ஆக்‌ஷன் சேர்ந்த படம். சாமானியனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை சொல்லும் கதை. இக்கதையை உருவாக்க 6 ஆண்டுகள் எடுத்துக்கொண்டேன். படங்களில் ஹரீஷ் கல்யாண் வழக்கமாக ரோஜாப்பூவுடன்தான் சுற்றுவார். இதில் அவரது கையில் அரிவாளை கொடுத்திருக்கிறோம். ஆக்‌ஷனிலும் சிறப்பாக நடித்துள்ளார்’’ என்றார். இதில் வழக்கறிஞராக அதுல்யா நடிக்கிறார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்