சந்தானம் படத்தில் நடிக்க இரண்டு நாயகிகள்!!

சந்தானம் படத்தில் நடிக்க இரண்டு நாயகிகள்!! 1

கண்ணன் இயக்கி வரும் சந்தானம் நடிப்பில் உருவாகும் படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்கள். ‘ஏ1’ படத்துக்குப் பிறகு ‘டகால்டி’, ‘டிக்கிலோனா’, ‘தில்லுக்கு துட்டு 3’, ‘கண்ணன் இயக்கி வரும் படம்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சந்தானம்.

இதில் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் நிலையில், மசாலா பிக்ஸ் நிறுவனம் மூலம் கண்ணனே தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் 45 நாட்கள் நடைபெற திட்டமிட்டுள்ளது படக்குழு. இதன் கதைக்களத்துக்காக, சிலம்பமும் கற்றுள்ளார் சந்தானம்.

விளம்பரம்

தற்போது இந்தப் படத்தின் நாயகிகளாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் ஸ்வாதி முப்பலா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் சந்தானத்துடன் ‘ஏ1’ படத்தில் நடித்தவர் தாரா அலிஷா பெர்ரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகளை முடித்து அடுத்த ஆண்டு பிப்ரவரியில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.இந்தப் படத்துக்கு முன்பாக அதர்வா, அனுபமா பரமேஷ்வரன் நடித்துள்ள, கண்ணன் இயக்கி வரும் படத்தை டிசம்பரில் வெளியாகவுள்ளது. அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கு ரஷ்யாவுக்குச் செல்ல படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

விளம்பரம்

Leave a Comment