“பாக்கு வெத்தல மாத்தி முடிச்சி பையன் வந்தாச்சு”!!”விரைவில் திருமண செய்ய இருக்கும் ஹரிஷ் கல்யாண்”!!”ஹோ இவனுங்க தான் பொண்ணா”!!

வெளியிட்டது

நடிகை அமலா பாலின் சர்ச்சைக் கிளப்பிய படமான “சிந்து சமவெளி” படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். 2010ஆம் ஆண்டே இந்த படம் வெளியாகிருந்தாலும் ஹரிஷ் கல்யாண் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. பின்னர் “அரிது அரிது”, “சட்டப்படி குற்றம்”, “சந்தமாமா” போன்ற படங்களில் நடித்து இருந்தாலும் முதல் முறையாக மக்களின் கவனத்தை ஈர்த்த படம் “பொறியாளன்” படமே. 2014ஆம் ஆண்டு வெளியான இந்த படம் இவருக்கு கொஞ்ச அறிமுகத்தை மக்களிடம் கொடுத்தது.

"பாக்கு வெத்தல மாத்தி முடிச்சி பையன் வந்தாச்சு"!!"விரைவில் திருமண செய்ய இருக்கும் ஹரிஷ் கல்யாண்"!!"ஹோ இவனுங்க தான் பொண்ணா"!! 1

பிறகு “வில் அம்பு” படத்திலும் கொஞ்சம் கவனம் ஈர்த்தார். நடிகர் கமல் தொகுத்து வழங்கிய விஜய் டிவியின் பிக் பாஸ் முதல் சீசனில் “Wild Card” என்ட்ரி கொடுத்து கடைசி வரையில் அந்த போட்டியில் இருந்து, ரன்னராக முடித்தார். இதுவே இவருடைய வாழ்வின் மிக முக்கிய திருப்புமுனையை கொடுத்தது. முக்கியமாக தமிழக மக்களிடம் நல்ல அறிமுகத்தை பெற்றார். அதுமட்டுமின்றி நல்ல பண்பான மனிதராக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்த நிகழ்ச்சி கொடுத்த அறிமுகம் அடுத்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்த “பியார் பிரேமா காதல்” படத்தில் நாயகனாக நடித்தார். அப்படத்தில் நாயகியாக மற்றொரு பிக் பாஸ் பிரபலம் ரைசா நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி பாடல்கள் மற்றும் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற தன்னுடைய முதல் முக்கிய வெற்றி படத்தை கொடுத்தார் ஹரிஷ் கல்யாண்.

அதன் பின்னர் இவர் நடித்த “இஸ்படே ராஜேவும் இதய ராணியும்” படம் மற்றொரு மிக பெரிய வெற்றியை ரசிகர்களிடம் பெற்றது. குறிப்பாக இளம் ரசிகர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் கொடுத்தது. கடந்த 2020ஆம் ஆண்டு இவர் நடிப்பில், விவேக், தான்யா நடித்த “தாராள பிரபு” படம் இவருடைய சினிமா வாழ்க்கையில் மிக பெரிய வெற்றியை பதிவு செய்தது. அடல்ட் கன்டென்ட்டாக இருந்தும் காமெடியில் படம் நன்றாக வொர்கவுட் ஆகி மிக பெரிய வெற்றியை பதிவு செய்தது.

இதனை அடுத்து இவர் இப்போது, “நூறு கோடி வானவில்” மற்றும் இயக்குனர் ஷண்முகம் முத்துசாமியின் பெயரிடப்படாத அடுத்த படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார். 31 வயதை அடைந்துள்ள இவருக்கு விரைவில் திருமணம் செய்ய பெற்றோர்கள் வரன் தேடி வந்து, ஒரு பெண்ணையும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இவருக்கு திருமணம் முடிந்து விடும் என்றும், இது பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்ட திருமணம் என்றும் கூறப்படுகிறது. இன்னும் பெண் குறித்த தகல்வல்கள் வெளியாகவில்லை என்றாலும், அவர் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் காத்துள்ளனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்