Categories: சினிமா

ஒரு கார் பார்க் பண்றதுல இவ்வளோ பிரச்சனை வருமா? ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ ட்ரைலர் இதோ.!

வெளியிட்டது

நடிகர் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ் பாஸ்கர் போன்ற பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘பார்க்கிங்’. இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் பல நல்ல படங்களில் நடித்திருந்த போதிலும் இவருக்கு சரியான களம் அமையவில்லை என்று தான் கூற வேண்டும். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘எல்.ஜி.எம்’ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை. தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷியின் தயாரிப்பு நிறுவனமான ‘தோனி எஎன்டர்டெயின்மென்ட்’ சார்பில் தயாரிக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் கலையான விமர்சனத்தையே பெற்றிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு கார் பார்க் பண்றதுல இவ்வளோ பிரச்சனை வருமா? ஹரிஷ் கல்யாணின் 'பார்க்கிங்' ட்ரைலர் இதோ.! 1
தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் தற்போது ‘பார்க்கிங்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியிருக்கிறார். இந்த படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி என்கிற நிறுவனம் தயாரித்துள்ளது. ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து இந்துஜா, எம்.எஸ் பாஸ்கர், இளவரசு, ராம ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இந்த படத்தின் ட்ரைலரை படக் குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர். ட்ரைலரை பார்க்கும் பொழுது திருச்சியில் இருந்து சென்னைக்கு வேலைக்காக வருகிறார் ஹரிஷ் கல்யாண்.


வாடகை வீட்டில் தங்கும் அவருக்கு தனது காரை பார்க்கிங் செய்வதில் ஏற்படும் பிரச்சனையை வைத்து இந்த படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. வீட்டின் ஓனர் எம்.எஸ். பாஸ்கர் உடன் ஹரிஷ் கல்யாணுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து இந்த ட்ரைலர் சுவாரஸ்யமாக வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ட்ரைலரைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Think Music India

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்