Categories: அரசியல்

போராட வேண்டிய நேரம்: சோனியா

காங்கிரசின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி திகார் சிறையில், கர்நாடகா முன்னாள் அமைச்சரான சிவகுமாரை இன்று (ஆக்.23) சந்தித்து பேசினார்.

கர்நாடகா காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமாரை பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், காங்கிரசின் தற்போதைய தலைவரான சோனியா காந்தி திகார் சிறையில் சிவகுமாரை சந்தித்து பேசியுள்ளார். இச்சந்திப்பில், “நமக்கு இது போராட்ட காலமாகும். நம்மீது உள்ள குற்றச்சாட்டிலிருந்து வெளி வர வேண்டும். அதற்காக நாம் அவர்களோடு போராட வேண்டும்” என்று கூறியுள்ளார். இதனை சிவகுமாரின் சகோதரர் சுரேஷ் பிடிஐ நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் உறுதிசெய்துள்ளார்.

இதில், சோனியாவுடன் கர்நாடககாங்கிரசின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இருந்தார். அதேபோல, சிவகுமாரின் சகோதரர் டி கே சுரேஷும் உடனிருந்தார்.

போராட வேண்டிய நேரம்: சோனியா 1
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கார்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே சிவகுமார்

இந்த சந்திப்பிற்கு முன்னர், கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி சிவகுமாரை சந்தித்து பேசியிருந்தார். அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய குமாரசாமி, “தன் மீதான வழக்கை சந்திப்பதில் உறுதியுடன் இருக்கிறார். பழிவாங்கும் அரசியல் சூழ்ச்சியை எதிர்கொள்ளும் அளவிற்கு திறன் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

சிவகுமாருடனான சோனியாவின் சந்திப்புக்கு முன்னர், அவர் மற்றோரு காங்கிரஸ் தலைவரான பா.சிதம்பரத்தை சந்தித்து பேசினார். சோனியாவின் நேரடி சந்திப்பு மூலம் இவ்விருவர்களுக்கு பின்னால் காங்கிரஸ் கட்சி இருப்பது உறுதியாகி உள்ளது.

ஹவாலா பரிவர்த்தனைகள் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக 2018 செப்டம்பர் மாதம் வரித்துறை தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில் டி.கே.சிவக்குமார் செப்டம்பர் 3 ஆம் தேதி பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்