சிவகார்த்திகேயனோட நடித்த அந்த படத்தால் அரசு வேலைய விட்டேன்”!!இப்போ படமும் இல்ல..வேலையும் இல்ல”!!புலம்பும் காமெடி நடிகர்!!

வெளியிட்டது

சினிமாவை கனவோடு அதை நோக்கி வரும் பலருக்கும் வாய்ப்புகள் எளிதாக கிடைத்து விடுவதில்லை. அப்படியே கிடைத்தாலும், ஒரு சில சின்ன சின்ன வேடங்களே மற்றும் ஏற்று நடிக்கும் நிலைமை உண்டாகும். பின்னர் ஒரு காட்சி அவர்களுடையது மக்களிடம் பயங்கரமாக வரவேற்கப்படுவே பின்னர் தொடர்ந்து அதனை சுற்றி சில வாய்ப்புகள் அமைந்தாலும், காலப்போக்கில் மக்கள் மறந்துவிட்டால் பின்னர் அடுத்தடுத்த வாய்ப்புகள் அமைவதும் இல்லாமல் போக சினிமா இவர்களை போன்றவர்களை கை விட்டுவிடுகிறது.

சிவகார்த்திகேயனோட நடித்த அந்த படத்தால் அரசு வேலைய விட்டேன்"!!இப்போ படமும் இல்ல..வேலையும் இல்ல"!!புலம்பும் காமெடி நடிகர்!! 1

நாடகக்கலைஞராக இருந்த ஹலோ கந்தசாமி. இவர் தமிழ் திரையுலகில் நடிகர் ஸ்ரீகாந்த் நடித்த “பூ” திரைப்படம் மூலம் ஒரு சிறிய பாத்திரத்தில் திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து மேலும் அடுத்த அடுத்த படங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்தார். அதில் குறிப்பாக மைனா, புலிக்குத்தி பாண்டி போன்ற படங்களில் நடித்து இருந்தார். இப்படி இருந்த இவர் தன்னுடைய சொந்த ஊரில்,  தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்து இருக்கிறார். இவருக்கு அமைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் தான் இவருக்கு மக்களிடம் நல்ல அறிமுகமாகவும், வாழ்க்கையை தொலைப்பதற்கும் வழி கொடுத்துள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிறிய காமெடி காட்சியில் இவர் தோன்றினாலும், நடிகர் சத்யராஜுடன் இணைந்து படம் முழுவத்திலும் வந்ததால் மக்களிடம் ஒரு நல்ல அறிமுகத்தை இந்த படம் இவருக்கு கொடுத்தது. இதற்கு அடுத்த படியாக இவர் மீண்டும் சிங்கமுத்துவுடன் இணைந்து நடித்த “சாட்டை” பட காட்சிகளும் நல்ல வரவேற்பை பெற்றன. அடுத்தடுத்த சில படங்களில் நடிக்க துவங்கினார். இதனால் சினிமா வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்ததால் ஊரில் கையிலிருந்த வங்கி வேலையை விட்டுவிட்டு முழுநேர சினிமாவை வாய்ப்பை தேடி அலைந்துள்ளார்.

இந்த முடிவே இவருக்கு பெரிய அடியாக அமைந்துள்ளது. சில படங்கள் கிடைத்து அதன் மூலம் நடித்து வந்தாலும், திடீரென கொரோனா காலகட்டம் வந்ததால், படப்பிடிப்புகள் திடீரென நிறுத்தப்பட்டன. சொற்ப படங்களே கையில் வைத்திருந்த இவருக்கு இந்த காலகட்டம் மிகவும் வேதனையாக அமைந்துள்ளது. இப்பொது அந்த கொரோனா காலகட்டம் முடிந்து சினிமாவேலைகள் துவங்கினாலும் இவருக்கு அடுத்த படவாய்ப்புகள் இன்றி இப்போது தவித்து வருகிறார்.

இந்நிலையில் தனியார் பேட்டி ஒன்றிருக்கு பேசியுள்ள இவர், இந்த கொரோனா காலகட்டம் என்னைப்போன்ற துணை நடிகர்கள் பலருக்கும் பெரிய அடியாக அமைந்துள்ளது. நலிந்து போன எங்களை போன்றோர்களுக்கு இது மிக பெரிய கஷ்ட காலமாகும். இந்த நிலையில் இருக்கும் என்னை போன்ற கலைஞர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் எனவும் தன்னுடைய கோரிக்கையை வைத்துள்ளார்.

 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் முடிந்த பின் மீண்டும் அதே கூட்டணியில் உருவான “ரஜினி முருகன்” படத்திலும் நான் நடித்தேன், அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்த நடிகர் சிவா உடனே, “அண்ணே நல்ல இருக்கீங்களா?” என கேட்டார். நடிகரும் சூரியும் “வாங்கனே எப்படி இருக்கீங்க என கேட்டார்.அது மிகவும் மனசிற்கு மகிழ்ச்சியாக அமைந்தது. அவரை போன்ற பெரிய நடிகர்கள் என்னை ஞாபகம் வைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்” என நெகிழ்ச்சியாக கூறினார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்