
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் நான் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குறித்து பேசிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விமர்சனத்துக்கு ஆளானது. எனது பேச்சு வேண்டுமென்றே தவறாக சித்தரித்து பரப்பப்படுகின்றது என்று ஏற்கனவே நான் விளக்கமளித்துள்ளேன்.
இந்த நிலையில், இன்று நான் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தேன். எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட கமல்ஹாசன் அவர்கள் என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பியிருந்தார். அவருக்கு என் நன்றியினையும், என் அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றேன்.
என்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.