மாணவர்கள் விருப்பப்பட்டால் சிறப்பு வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்!

மாணவர்கள் விருப்பப்பட்டால் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்று கொள்ளலாம் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் விருப்பப்பட்டால் சிறப்பு வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்! 1
செங்கோட்டையன்

புதிய கல்விக் கொள்கை திட்டம் படி ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

விளம்பரம்

ஏற்கனவே பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வும் இருக்கின்ற நிலையில், ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வு எதற்கு என மக்களிடையே கேள்விகள் எழுந்தாலும் அதற்கான பதிலை தமிழக அரசு தெளிவாக கூறவில்லை.

அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் முன்னாள் முதல்வர் ராஜகோபாலாச்சாரி அவர்களால் கொண்டுவரப்பட்ட குலக்கல்வித் திட்டத்தையே புதிய கல்விக் கொள்கை திட்டம் பிரதிபலிப்பதாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

விளம்பரம்

இந்நிலையில் நடப்பாண்டு முதல் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடக்க இருக்கிறது. இதுகுறித்து ஈரோடு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி நேரத்தில் மட்டுமே சிறப்பு வகுப்புகள் நடைபெறும். இது தவிர மாணவர்கள் விருப்பப்பட்டால் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்று கொள்ளலாம் என்று கூறினார்.

விளம்பரம்

Leave a Comment