ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்துறையின் முடிசூடா மன்னனாக இருந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். குறிப்பாக தமிழில் அவர் பாடும் போது ரசிகர்கள் காதல்,காமம், நட்பு, சோகம், இன்பம், துன்பம் போன்ற அனைத்து உணர்ச்சிகளையும் உணர்ந்தார்கள். உணர்ச்சி என்பது உணர மட்டுமே முடியும் ஆனால் அந்த உணர்ச்சிகளுக்கு கூட்தன் குரலால் உயிர் கொடுத்தவர் எஸ்பிபி. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு முதன்முதலாக பாடிய அவர் பின்னாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் குரலாகிப் போனார். ரஜினி படங்களில் வரும் ஓப்பனிங் சாங் எஸ்பிபி இல்லாமல் இருந்ததே இல்லை. அன்று தொடங்கி தான் இறக்கும் வரை அனைத்து நடிகர்களுக்கும் பாடிய பெருமை கொண்டவர் என்றால் அது எஸ்பிபி தான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் பிறந்து வளர்ந்த இவர் ஆரம்பத்தில் மேடைகளில் பாடிக் கொண்டிருந்தார். பின்னர் சென்னைக்கு வேலைத்தேடி வந்த இவருக்கு படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அன்று தொடங்கி இன்று வரை சுமார் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி, உலகிலேயே அதிகமான பாடல்களைப் பாடியவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். அதே போல ஒரே நாளில் 21 பாடல்களை ரிக்கார்ட் செய்த பெருமைக்கும் சொந்தகாரர். தெலுங்கை தாய்மொழியாக கொண்ட எஸ்பிபி ஆரம்பத்தில் வாய்ப்பு தேடி அலையும் போது தமிழ் சரியாக உச்சரிக்க வராத காரணத்தால் திறமை இருந்தும் புறக்கணிக்கப்பட்டார். பின்னர் எம்எஸ்வியின் மேற்பார்வையில் தமிழை சரளமாக கற்றுக் கொண்டுள்ளார். அது தொடங்கி தான் பாடிய அனைத்து மொழிகளையும் முறையாக கற்றுக் கொண்டே பாடல்களை பாடியுள்ளார்.
பாடல் மட்டுமின்றி பல படங்களில் நடித்தும் அசத்தி இருக்கிறார். நிலா பற்றி நிறைய பாடல்கள் பாடிய காரணத்தால் இவரை பாடும் நிலா பாலு என்று அழைப்பர். மண்ணில் இந்த காதலன்றி, சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் போன்ற பாடல்களை மூச்சு விடாமல் பாடி அசத்தியிருப்பார். பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் போன்ற பல உயரிய விருதுகளைப் பெற்றார். இவரும் இளையராஜாவும் நெருங்கிய நண்பர்கள். ஆரம்பத்தில் சென்னையில் இருவரும் வேலை தேடி அலைந்த போது ஒரே அறையில் தங்கியுள்ளனர். இதை பல முறை அவரே கூறியிருக்கிறார். பல பாடல்கள் இளையராஜா இசையில் பாடியிருக்கிறார் எஸ்பிபி. பல மேடைகள், பல கச்சேரிகள், பல வெளிநாடு கான்செர்ட் என இருவரும் நெருங்கிய நண்பர்களாகவே இருந்து வந்தனர்.
இந்த நிலையில் 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் இழப்பு ஒட்டு மொத்த தமிழகத்திற்கு பேரிழப்பாக இருந்தது. அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அது தொடங்கி அவரை சிறப்பிக்கும் வண்ணம் பல நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். தற்போது விஜய் டிவியில் எஸ்பிபியை சிறப்பிக்கும் வண்ணம் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில் ஏ.ஆர்.ரகுமான், இளையராஜா போன்றவர்கள் கலந்து கொண்டனர். அப்போது எஸ்பிபி பாடலை பாடும் போது இளையராஜா உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் வடித்தார். எஸ்பிபியின் உள்ளே நான்தான் இருக்கிறேன் என்றும் அவர் கண்ணீர் மல்க கூறினார். Watch the below Video…
Youtube Video Code Embed Credits: Vijay Television