Categories: சினிமா

இளையராஜா வாழ்க்கை படமாக்க விருப்பம்:யுவன்!

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை திரைப்படமாக்க ஆசை இருப்பதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

இளையராஜா வாழ்க்கை படமாக்க விருப்பம்:யுவன்! 1
இளையராஜா

பிரபலங்களின் வாழ்க்கை கதைகள் இப்போது சினிமாவாக்கப்பட்டு வருகிறது. நடிகர் என்.டி.ஆர், நடிகை சாவித்ரி, கிரிக்கெட் விரர்கள் சச்சின், தோனி உட்பட பலரின் வாழ்க்கை கதைகள் படமாக்கப்பட்டுள்ளன.

தற்போது ஏர்டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை கதை, சூரரைப் போற்று படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில், இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று கதையை திரைப்படமாக்க விரும்புவதாக இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்கு ராஜா தி ஜர்னி என்ற டைட்டில் பொருத்தமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இளையராஜாவின் கதாபாத்திரத்திற்கு நடிகர் தனுஷ் பொருத்தமாக இருப்பாரெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்படம் குறித்தான அறிவிப்பு விரைவில் வருமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்