நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 பேர் நியமன உறுப்பினர்களாக இருக்கின்றனர். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு வருகிறது. இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட கதையெழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எம்.பிக்களாக நியமித்துள்ளார். Video given below.

1976 ஆம் ஆண்டு இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. அன்று முதல் இன்று வரை 1000 படங்களுக்கு மேல் இசை அமைத்து, தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார்.இசை உலகின் ஜாம்பவனாக இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்றளவும் கொடிகட்டி வருபவர் இளையராஜா. இவர் இசையின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை இருக்கிறார்.

கர்நாடக இசை மற்றும் மேலைநாட்டு இசையிலும் கைதேர்ந்தவர்கவே இளையராஜா இருக்கிறார். இவருக்கு பல விருதுகளும், பாராட்டுகளும் குவிந்துள்ளன. இந்திய அரசின் மிக முக்கிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் 2010ஆம் ஆண்டு வாங்கினர். மேலும் 5 தேசிய விருதுகளும், 2018ஆம் பத்ம விபூஷண் விருதையும் இவருக்கு அளித்து இந்திய அரசு கவுரவித்துள்ளது. பல விருதுகளும், ரசிகர்கள் மனதையும் கொள்ளை கொண்ட இவர் அண்மை காலமாக செய்து வரும் செயல்கள் ரசிகர்கள் பலருக்கும் பிடிக்காமல் உள்ளது.

இந்நிலையில் இசைஞானி இளையராஜா இன்று மாநிலங்களவை எம்.பியாக தமிழில் உறுதிமொழியேற்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Video Courtesy – Dinamalar