Categories: அரசியல்

6 மாதத்தில் பொருளாதரத்தை மோடி சீரழித்து விட்டார்!

கடந்த 6 மாத காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மோடி சீரழித்தது விட்டதாக முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லி பேரணியில் கலந்துகொண்ட முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பா.சிதம்பரம், “இந்த ஆறு மாதத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது. ஆனாலும் நிதி அமைச்சர் பொருளாதாரம் சீரான நிலையில் இருப்பதாகவும், உலக பொருளாதாரத்தின் முன்னிலையில் இருப்பதாக கூறுகிறார். நல்ல நாள் வரட்டும் என்பதை மட்டும் தான் இன்னும் அவர் கூறாமல் இருக்கிறார்” என விமர்சித்துள்ளார்.

6 மாதத்தில் பொருளாதரத்தை மோடி சீரழித்து விட்டார்! 1

அதே போல், இந்த பேரணியில் கலந்துகொண்ட மத்திய பிரதேசம் முதலமைச்சர் கமல் நாத், “மக்கள் முன் அனைத்தும் திரையிடப்பட்டு கிடைக்கிறது. காங்கிரஸ் கட்சி என்றும் மக்களுக்காக போராடும் கட்சி” என தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் துணை முதல்வரான சச்சின் பைலட் பேசும்போது, “பொருளாதார வளர்ச்சி கிட்டத்தட்ட நின்று விட்டது. இழப்புகள் மிக பெரிய அளவில் இருக்கிறது. அதே போல பணவீக்கம் மோசமான நிலையில் இருக்கிறது. பொருளாதார வளர்ச்சியின் எதிர் நடவடிக்கையால் அரசாங்கம் தோல்வியுற்று நிற்கிறது” என்றார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்