கடைசி மூச்சு வரைக்கும் ஜனநாயகத்தை காக்க போராடுவோம்: சோனியா

நாட்டின் மக்கள் அனைவரும் அநீதிக்கு எதிராக போராட வேண்டுமெனவும், கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும் நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் போராடுமெனவும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

கடைசி மூச்சு வரைக்கும் ஜனநாயகத்தை காக்க போராடுவோம்: சோனியா 1

இந்தியாவை காப்பாற்றவும் என்ற நோக்கத்தோடு பேரணி காங்கிரஸ் கட்சியின் சார்பில் டெல்லி ராமலீலா மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் தேசிய தலைவரான சோனியா காந்தி பேசுகையில், “அநீதியை அனுபவிப்பது மிகப் பெரிய குற்றம். ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற வேண்டிய நேரம் இது. நாட்டைக் காப்பாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது, அதற்காக நாம் கடுமையாக போராட வேண்டும்” என்றார்.

விளம்பரம்

“மோடி-ஷா கூட்டணி நாடாளுமன்றத்தை பற்றியோ, ஜனநாயக நிறுவனங்களை பற்றியோ கவலைப்படுவதில்லை. உண்மையான பிரச்சனைகளை மறைப்பதே அவர்களின் வேலை. அவர்களால் தினமும் அரசியலமைப்பு மீறப்படுகிறது. மீண்டும் அவர்களாலே அரசியலமைப்பு தினமும் கொண்டாடுகின்றன” எனவும் குற்றசாட்டியுள்ளார்.

விளம்பரம்

Leave a Comment