என் பெயர் ராகுல் காந்தி, ராகுல் சவர்க்கர் இல்லை!

தன்னுடைய கருத்தை தவறாக புரிந்துக்கொண்டு மன்னிப்பு கேட்க சொல்வதாகவும், தன்னுடைய பெயர் ராகுல் காந்தி, ராகுல் சவர்க்கர் இல்லையென்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக நேற்று மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, “நாட்டில் நிலவி வரும் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் குறித்து பிரதமர் மோடி எந்த கருத்தும் தெரிவிப்பது இல்லை. பாஜக எம்.எல்.ஏ பாலியல் வழக்கில் சிக்கும் போதும் மவுனமாகவே இருக்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.

விளம்பரம்
என் பெயர் ராகுல் காந்தி, ராகுல் சவர்க்கர் இல்லை! 1
ராகுல் காந்தி

மேலும் கூறுகையில், “பிரதமர் மோடி மேக் இன் இந்தியா என்ற திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் இந்தியா ரேப் இன் இந்தியாவாக மாறிக்கொண்டு இருக்கிறது” எனவும் விமர்சனம் தெரிவித்தார்.

இதுகுறித்து, மத்திய அமைச்சர் ஸ்மிர்தி ராணி தலைமையில், மக்களவையில் கூடிய பாஜக பெண் எம்.பிக்கள் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என கூச்சலிட்டனர்.

விளம்பரம்

டெல்லி ராம்லீலா மைதானத்தில் “இந்தியாவை காப்பாற்றுங்கள்” என்ற கோசத்தோடு காங்கிரஸ் கட்சி இன்று பேரணி நடத்தியது. இதில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி, “நேற்று மக்களவையில் நடந்த செயலுக்காக மன்னிப்பு கேட்க சொல்லி பாஜகவினர் கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய பெயர் ராகுல் சவர்க்கர் இல்லை. ஆகையால் மன்னிப்பு கேட்க முடியாது. உண்மையை பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது” என தெரிவித்தார்.

தொடர்புடையவை  பீமா கோரேகான் வழக்கு: கௌதம் நவ்லகா மனு தள்ளுபடி!

மோடியின் பொருளாதாரத்தை குறிப்பிட்டு பேசிய அவர், ஒரு காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 9 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இன்று இந்தியாவை பாருங்கள். வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.200ஆக இருக்கிறது. இந்த தேசத்திற்காகவும், அரசியலமைப்பு பாதுகாக்கப்படவும் தனது கடைசி மூச்சு இருக்கும் வரையிலும் காங்கிரஸ் கட்சி போராடும்” என்றும் பேசினார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment