திருத்தப்பட்ட தேசிய குடியுரிமை சட்டத்தில் இஸ்லாமியர்கள் பாஜகவின் கூட்டணிக் கட்சியான அகாலி தளம் தெரிவித்துள்ளது.
தேசிய குடியுரிமை சட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி போராட்ட களமாக மாறியுள்ளது. இதனால் விழித்துக்கொண்ட பல கட்சிகள் இப்போது இருந்தே தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர். அதிலும் பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சிகளே அவ்வாறு பேச தொடங்கி விட்டன.

பிகாரில் நிதீஷ் குமார் என்.ஆர்.சி சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான அகாலி தளம் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளது.
அகாலி தளத்தின் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், “திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் இஸ்லாமியர்களை நினைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். பல்வேறு மதத்தை சார்ந்த மக்கள் நம் நாட்டில் குடி மக்களாக இருக்கின்றார்கள். இது நம்முடைய பலம் தான். ஆதலால் மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை மறுக்கக் கூடாது. அனைவருக்கும் நல்லதே செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் மதத்தின் கோட்பாடு அதை நாடாளுமன்றத்தில் நாங்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றோம்” என்று கூறியுள்ளார்.