சரிவில் இந்திய ஏற்றுமதி, அதிகரிக்கும் பற்றாக்குறை

இந்தியாவின் பொருளாதாரம் தற்போது மிகப்பெரிய மந்தநிலை சந்தித்து வரும் நிலையில் ஏற்றுமதியும். தற்போது சரிவடைந்து வருகிறது இதனால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை அதிகளவில் உயர்ந்துள்ளது.

தற்போது இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை 17.58 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 12 புள்ளி 12 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது. இந்த பற்றாக்குறை ரூபாய் வீழ்ச்சிக்கும் வழிவகுக்கிறது.

சரிவில் இந்திய ஏற்றுமதி, அதிகரிக்கும் பற்றாக்குறை 1

ஆடைகள் ஏற்றுமதி 4 மாதங்களாக சரிவடைந்து 2,598 கோடி டாரலாரக சரிந்துள்ளது. அதேபோல், இறக்குமதியும் 3,811 கோடி டாலராக குறைந்துள்ளது.

இது மட்டுமின்றி இந்தியாவில் இருந்த அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் 17 பொருட்களின் வர்த்தகம் சரிந்துள்ளது. அதேபோல் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் 21 பொருட்களின் வர்த்தகமும் குறைந்துள்ளது. அதிலும் முக்கியமாக இந்தியாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் முந்திரி ஏற்றுமதி 33.9 சதவீதமாக சரிந்துள்ளது என்னை உணவுகளின் ஏற்றுமதியும் 54.59 சதவீதமாக சரிந்துள்ளது.

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் இறக்குமதி அளவு 46.13 சதவிகிதமும், மருந்துப்பொருட்கள் 20.6 சதவிகிதமாகவும், இன்ஜினியரிங் பொருட்கள் 6.32 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்