காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஜப்பானின் முன்னணி நிறுவனமான நோக்கியா தொழிற்சாலை செயல்பட்டு வந்தது.
நோக்கியா நிறுவனம் தொடர்ந்து பல கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வந்தாலும் அரசுக்கு பல கோடி ரூபாய் பாக்கி வைத்து இருந்ததாலும் இந்த ஆலையை மூடிவிட்டு இந்தியாவிலிருந்து வெளியேறியது.

அதன் பின்னர் இந்த ஆலையை மீண்டும் திறப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து பின்லாந்து நாட்டை சேர்ந்த சால்காம்ப் என்ற நிறுவனம் நோக்கியா இயங்கிவந்த வளாகத்தை கையகப்படுத்தி உள்ளது.
இந்த செல்போன் நிறுவனம் செல்போன்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனமாகும். அதுமட்டுமின்றி இந்த நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போனுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு இதன் உற்பத்தியை துவங்க இருக்கிறது அப்போது ரூபாய் 2000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய உள்ளது எனவும் அதனால் 7,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிறுவனம் மூலம் 10 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 5 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்குமெனவும் அந்நிறுவனத்தின் இந்திய மேலாண்மை இயக்குனர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.