நாட்டின் உள்நாட்டு உற்பத்தி குறையும்:ஆசிய வளர்ச்சி வங்கி

இந்தியாவின் 2020ஆம் நிதி ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டை 5.1 சதவிகிதமாக இருக்குமென ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டின் உள்நாட்டு உற்பத்தி குறையும்:ஆசிய வளர்ச்சி வங்கி 1
பொருளாதார மந்த நிலை ஆசிய வளர்ச்சி வங்கி

மத்திய அரசின் பல்வேறு புரட்சிகளின் காரணமாக பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. இதனால் வேலையின்மை பெருகியுள்ள நிலையில், ஆட்டோமொபைல் துறையும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. வங்கி சாரா நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் கிராமப்புறத்தில் நுகர்வு மீதான தாக்கம் குறைவு போன்ற காரணத்தால், முன்னதாக கணிக்கப்பட்ட 6.5 சதவிகித மொத்த உள்நாட்டு உற்பத்தியை 5.1 சதவிகிதமாக குறைத்துள்ளது ஆசிய வளர்ச்சி வங்கி.

பொருளாதாரத்திற்கு ஆதரவான கொள்கைகளால் உற்பத்தியின் அளவு 6.5 சதவிகிதமாக கணக்கிடப்படுவதாகவும், முந்தைய வளர்ச்சி கணக்கீடான 7.2 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என கூறப்பட்டது. அதே போல சீனாவின் வேகமான வளர்ச்சியினால், இந்தியா தனது நிலையை இழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சீனாவின் வளர்ச்சியாக 6.2 சதவிகிதம் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் உள்நாட்டின் தேவைகளில் ஏற்படுள்ள மந்தநிலை, உலகளாவிய செயல்பாடு ஆகிய காரணங்களால் சீனாவின் வளர்ச்சி 6.1 சதவிகிதமான இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்